For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்த ஐ.எஸ். தலைவர் அல் பக்தாதி உயிரிழந்திருக்கலாம்?

By Mathi
Google Oneindia Tamil News

பாக்தாத்: அமெரிக்கா தலைமையிலான நேசநாடுகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி படுகாயமடைந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈராக், சிரியாவில் ஏராளமான நகரங்களைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை பிரகடனம் செய்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். இந்த இஸ்லாமிய தேசத்தின் தலைவராக - கலிபாவாக அபு பக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டார்.

Baghdadi reportedly injured in air strike, may die?

இந்த அமைப்பினர் சிறுபான்மை இன மக்கள், வெளிநாட்டினரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்து வருகின்றனர். இதனால் ஐ.எஸ். இயக்கத்தை ஒழிக்க அமெரிக்கா தலைமையில் அதன் நேச நாடுகள் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் ஈராக்கில் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் அபு பக்கர் அல் பக்தாதி படுகாயம் அடைந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது. இதனை ஈராக் அரசு ஆலோசகர் ஹிஷாம் அல்-ஹஷிமி உறுதி செய்திருந்தார்.

சிரியா எல்லையை ஒட்டியுள்ள அல்-பாஜ் கிராமத்தில் பக்தாதி தங்கி இருந்தபோதுதான் அல் பக்தாதி தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்திருக்கிறார்.. அதே நேரத்தில் மிக மோசமாக காயமடைந்த பக்தாதி உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The leader of Islamic State, Abu Bakr al-Baghdadi, has been seriously wounded may he in an air strike in western Iraq. Baghdadi’s injuries initially were so severe that it was suspected that he might die
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X