இந்தியாவில் நிலைமை மோசமாகிறது.. அடிக் அகமது கொலையால்.. பரபரத்த பஹ்ரைன் பாராளுமன்றம்.. பறந்த வார்னிங்
மனாமா: அடிக் அகமது மற்றும் அவரின் தம்பி போலீஸ் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதற்கு பஹ்ரைன் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையில் இருந்த அவரை போலீசார் மருத்துவ பரிசோதனை என்று கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அங்கே செய்தியாளர்கள் போல கெட்டப் போட்டு வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், கேமராவிற்கு முன்னே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர். முதலில் அடிக் அகமதுவை சுட்டுவிட்டு அதன்பின் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
அடிக் அகமது ஏற்கனவே கடத்தல் கேஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்குப், உமேஷ் பால் கொலை வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஆவார். இவர் பெரிய குற்றவாளி என்றாலும்.. சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை கொடுப்பதே சரியானது.
மாறாக போலீஸ் கண் முன்னே அவரை ஒரு கும்பல் சுட்டுக்கொலை செய்துள்ளது.
Atiq Ahmed's murder was discussed in Bahrain parliament.#AtiqueAhmed pic.twitter.com/N0tGzNn28t
— Md Asif Khan (@imMAK02) April 20, 2023
கண்டனம்: அடிக் அகமது மற்றும் அவரின் தம்பி போலீஸ் முன்னிலையில் கொலை செய்யப்பட்டதற்கு பஹ்ரைன் பாராளுமன்றத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடிக் அகமது மற்றும் அவரின் தம்பி போலீஸ் கஸ்டடியில் இருந்தனர். அவர்களை போலீசார் கண் முன்னே இந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். இதை வெறுமனே கண்டனம் தெரிவித்துவிட்டு விடக்கூடாது. இந்தியாவுடன் நாம் பொருளாதார ரீதியான உறவை கொண்டு இருக்கிறோம்.
இந்தியர்கள் பஹ்ரைனில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியர்கள் பஹ்ரைனில் சுயமரியாதையோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் அவர்களை நாம் பாதுகாத்து வருகிறோம்.
அவர்கள் அவர்களின் மதங்களை பின்பற்றுகிறார்கள். நிம்மதியாக இருக்கிறாரக்ள். ஆனால் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை கவலை அளிக்கிறது. இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உள்ளது.
பஹ்ரைன் அரசும்.. வளைகுடா நாடுகளும் இதை கண்டிப்பதோடு நிற்க கூடாது. இந்தியாவில் தீவிர இடதுசாரி அரசு உள்ளது. அங்கே நிலைமை கைமீறி போகிறது.
இதை பஹ்ரைனும், வளைகுடா நாடுகளும் சேர்ந்து நிறுத்த வேண்டும். இஸ்லாமியர்கள் இனியும் ரத்தம்.
இன்னொரு எம்பி பேசுகையில், அடிக் அகமது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்பே சொன்னார். ஆனால் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. இப்போது போலீஸ் கண் முன் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு இது போன்ற விஷயங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.அங்கே இஸ்லாமியர்கள் மோசமாக தாக்கப்படுகிறார்கள். மசூதிகள் இடிக்கப்படுகின்றன.
இதை அரபு நாடுகள் எல்லாம் கண்டிக்க வேண்டும். அதோடு இந்தியாவின் தூதரகத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும் என்று பேசி உள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications