கண்ட்ரோலை இழக்கும் பாக் அரசு! வெளியே கால் வைக்கவே பயப்படும் ராணுவம்! போராளிகள் வசம் 80% பலுசிஸ்தான்?
இஸ்லாமாபாத்: இந்தியாவை வம்பிழுக்கும் பாகிஸ்தானுக்கு உள்நாட்டிலேயே பெரிய தலைவலி இருக்கிறது. தனிநாடு கோரி போராடி வரும் பலுசிஸ்தான் போராளிகள் பாகிஸ்தானில் பல முக்கிய பகுதிகளை தங்கள் கண்ட்ரோலில் கொண்டு வந்துவிட்டனராம். இதே நிலை நீடித்தால் இன்னும் சில வாரங்களில் பலுசிஸ்தான் மொத்தமாகப் பாகிஸ்தானை விட்டு போய்விடும் எனச் சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் தான் பலுசிஸ்தான். இதுதான் நிலப்பரப்பு அடிப்படையில் பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணம். அதேநேரம் மக்கள் தொகை மிகக் குறைந்த மக்கள் வாழும் மாகாணமாக இது அமைந்துள்ளது.. ஈரான் ஆப்கானிஸ்தான் உடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள பலுசிஸ்தான் மக்கள் தங்களை ஒருபோதும் பாகிஸ்தானியர்களாகக் கருதுவது இல்லை.

தனி நாடு கோரி போராட்டம்
தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர்கள் போராடி வருகிறார்கள். இருப்பினும், ராணுவம் மற்றும் போலீஸை பயன்படுத்தி அவர்களைப் பாகிஸ்தான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அதேநேரம் அங்குள்ள பலுசிஸ்தான் புரட்சியாளர்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள்.
இந்தியா பாக். மோதல் இருந்த போது, அதைச் சரியான வாய்ப்பாகப் பார்த்த பலுசிஸ்தான் போராளிகள் இறங்கி அடிக்க தொடங்கினர். இதனால் பலுசிஸ்தானின் கண்ட்ரோலை பாகிஸ்தான் அரசு இழந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் பலுசிஸ்தான் மொத்தமாகப் பாகிஸ்தானை விட்டுப் போய்விடும் எனச் சொல்லப்படுகிறது
அஞ்சும் பாகிஸ்தான் ராணுவம்
இது தொடர்பாக பலுச் அமெரிக்கக் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ரசாக் பலுச் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தானின் பெரும்பகுதியை மீதான கண்ட்ரோலை பாகிஸ்தான் அதிகாரிகள் இழந்துவிட்டதாகவும் பாக். ராணுவம் கூட முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் ரோந்து செய்ய அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குவெட்ட நகரைத் தாண்டி ஒரு அடி கூட பாகிஸ்தான் ராணுவத்தால் வைக்க முடியாது.. அந்தளவுக்கு அவர்கள் பலுச் படையைப் பார்த்து அச்சத்தில் இருப்பதாகவும் ரசாக் தெரிவித்தார். இதனால் பலுசிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை, ராணுவ ரோந்து கூட இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி இருப்பதாகத் தெரிவித்தார். பலுசிஸ்தான் என்பது பல ஆயிரம் கோடி மதிப்பிலான வளங்கள் நிறைந்த பகுதியாகும். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அதைத் தக்கவைக்கப் போராடி வருகிறது.
80% நிலம் பலுச் போராளிகள் வசம்
ஆனாலும், பலுச் போராளிகளிடம் அடி வாங்கும் பாகிஸ்தான் ராணுவம் இப்போது 80%க்கும் அதிகமான நிலத்தில் கண்ட்ரோலை இழந்துவிட்டதாகவும் ரசாக் தெரிவித்தார். ராணுவம் பின்வாங்கவில்லை என்றால் 1971ல் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக (வங்கதேசம்) பிரிந்து சென்றபோது ஏற்பட்டது போல மிக மோசமான சம்பவம் ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், பாகிஸ்தான் ராணுவம் இப்போதே கண்ணியத்துடன் பின்வாங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் 1971 போல மீண்டும் அவமானப்பட வேண்டி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
நேரம் வந்துவிட்டது
மேலும், பலுச் போராட்டத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவிடம் பலுச் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவு கேட்பீர்களா என்ற கேள்விக்கு அவர், "நாங்கள் யாரிடமும் சென்று ஆதரவு எனக் கோர மாட்டோம். அதேநேரம் இந்தியா தங்கள் ஆதரவை அளித்தால் அதை வரவேற்கத் தயாராகவே இருப்பதாக அவர் தெரிவித்தார். பலுசிஸ்தான் விவகாரத்தில் உடனடியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்ற அவர் இல்லையென்றால் அது பிராந்தியத்தில் மோசமான சூழலை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications