பாகிஸ்தான் வழியாக இந்தியாவை சூழும் சீனா! ஷெரீப் உடன் கைகோர்க்கும் ஜி ஜின்பிங்? பலூச் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானும் சீனாவும் கடந்த பல ஆண்டுகளாகவே நெருங்கி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே சீக்கிரமே பாகிஸ்தானில் சீன ராணுவமே கூட களமிறங்கக்கூடும் என்று எச்சரிக்கை வந்துள்ளது. அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து சுதந்திரம் பெற விரும்பும் போராளிகள் தான் பலூச் போராளிகள். பாகிஸ்தானுக்கும் பலுசிஸ்தானுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் பலுசிஸ்தான் தனி நாடும் என்றும் சொல்லி பலூச் போராளிகள் போராடி வருகிறார்கள். அவர்களைச் சமாளிப்பதை பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது.

பலூச் விவகாரம்
ஏற்கனவே, பாகிஸ்தான் பொருளாதாரச் சிக்கல் தொடங்கிப் பல பிரச்சினைகளால் தள்ளாடி வரும் நிலையில், பலூச் விவகாரமும் பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. இதற்கிடையே பலூச் பிரச்சினையைப் போக்க பாகிஸ்தானில் சீன ராணுவம் இறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இது தொடர்பாக பலூச் பிரதிநிதி மிர் யார் பலோச் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அடுத்த சில மாதங்களில் பலுசிஸ்தானில் சீனா தனது ராணுவப் படைகளைக் களமிறக்கும் என்று எச்சரித்துள்ளார். இது பலூச் பிராந்திய மக்களுக்கும் இந்தியாவிற்கும் தீவிரமான மற்றும் உடனடி அச்சுறுத்தலாக இருக்கும் என மிர் யார் எச்சரித்துள்ளார்.
அச்சுறுத்தல்
கடந்த ஜனவரி 1ம் தேதி எழுதப்பட்ட இந்த கடிதத்தில் பலூச் குடியரசின் பிரதிநிதியான மிர் யார் பலோச், பலுசிஸ்தானின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் பாகிஸ்தான், சீக்கிரமே அங்குச் சீன படைகள் களமிறங்க அனுமதிக்கக்கூடும். இது பலுசிஸ்தானுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் கூட கற்பனை செய்ய முடியாத அச்சுறுத்தல் என்று அவர் கூறியுள்ளார்.
சீன படைகள்
அந்தக் கடிதத்தில் மேலும், "பலுசிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் வலுப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டால், சீனா சில மாதங்களுக்குள் படைகளை நிறுத்தக்கூடும்.. 60 மில்லியன் பலூச் மக்களின் விருப்பமின்றி பலுசிஸ்தான் மண்ணில் சீனப் படைகள் களமிறக்கப்படும். சீனா படைகளின் இருப்பு இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் கற்பனை செய்ய முடியாத அச்சுறுத்தலை உருவாக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சீனா- பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் மிர் யார் பலோச் கவலை தெரிவித்தார். பாகிஸ்தான்- சீனா இணைந்து உருவாக்கும் இந்த CPEC "இறுதிக் கட்டங்களை" எட்டியுள்ளதாகவும், இது நிலைமையை மேலும் அபாயகரமாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால் இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே திட்டவட்டமான, பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என அவர் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் உண்மையானவை என்றும் உடனடியாக அந்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவுக்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே பல நூற்றாண்டுக்கால வரலாற்று, கலாச்சாரப் பிணைப்புகள் உள்ளன என்பதை மிர் யார் பலோச் எடுத்துரைத்தார். ஹிங்லாஜ் மாதா கோவில் (நானி மந்திர்) போன்ற புனிதத் தளங்கள் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் சின்னங்களாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராட்டு
இது மட்டுமின்றி பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது அனைவருக்கும் தெரியும். அதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதைக் குறிப்பிட்ட மிர் யார், இந்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவைப் பாராட்டினார். பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் நீதிக்கான முன்மாதிரியான தைரியத்தையும், அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் இச்செயல் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார்..
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications