ஷேக் ஹசீனாவின் கதாபாத்திரத்தில் நடித்த.. நடிகை நுஷ்ரத் பரியா அதிரடி கைது.. என்ன வழக்குனு பாருங்க!
டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வன்முறையான பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் அவரது கட்சி தலைவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் கதாபாத்திரத்தில் படத்தில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகை நுஷ்ரத் பரியா என்பவரை அந்த நாட்டு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இது வன்முறையானதால் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது நம் நாட்டில் தான் அவர் உள்ளார்.

இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. முகமது யூனுஸ் என்பவர் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். ஷேக் ஹசீனா மீது இனப்படுகொலை உள்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைவர்களும் வங்கதேசத்தில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். கொலை உள்பட பல பிரிவுகளில் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நுஷ்ரத் பரியா (வயது 31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது நுஷ்ரத் பரியா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதாவது கடந்த ஆண்டு ஜூலை மாதம் தலைநகர் டாக்காவில் உள்ள வட்டாராவில் மாணவர்கள் பேராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் மாணவர் ஒருவரை கொல்ல முயன்றதாக நடிகர், நடிகைகள் என்று 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் நுர்ஷத் பரியாவும் ஒருவர் ஆவார்.
இதில் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது டாக்காவில் உள்ள ஷாஜகான்லால் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு செல்ல முயன்றார். தாய்லாந்துக்கு அவர் தப்ப முயன்ற நிலையில் அதுபற்றி முன்கூட்டியே அறிந்த போலீசார் விமான நிலையத்தில் வைத்து நடிகை நுஷ்ரத் பரியாவை கைது செய்தனர்.
இதையடுத்து நடிகை நுஷ்ரத் பரியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றகாவலில் சிறையில் அடைக்கப்பட்டார். நுஷ்ரத் பரியா சார்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு உள்ளது. அதாவது வங்கதேசத்தின் முதல் பிரதமராக இருந்தவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவர் தான் ஷேக் ஹசீனாவின் தந்தை. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் தனியாக பிரிய ஷேக்முஜிபுர் ரஹ்மான் தான் காரணம்.
இதையடுத்து அவரே வங்கதேசத்தின் முதல் பிரதமராக பொறுப்போற்றார். இதையடுத்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து 'முஜிப் தி மேக்கிங் ஆப் ஏ நேஷன்' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த படம் பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தை வங்கதேசம் மற்றும் இந்தியா இணைந்து தயாரித்தன. இந்த திரைப்படத்தில் ஷேக் ஹசீனாவின் காதாபாத்திரத்தில் தான் நுஷ்ரத் பரியா நடித்திருந்தார். இப்போது அவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications