சுட்டெரித்த துபாய் வெயிலில்! வெறுங்காலில் 104 கி.மீ. தூரம் ஓடிய பெங்களூர் இளைஞர்! ஏன் என்னாச்சு?
ஷார்ஜா: பெங்களூரை சேர்ந்த 34 வயது இளைஞர் துபாயில் 104 கி.மீ. தூரம் வெறும் காலில் ஓடிய சம்பவம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பூமி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது காலநிலை மாற்றம். இது குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. இந்த பாதிப்பிலிருந்து மீள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் சர்வதேச காலநிலை மாற்ற நடவடிக்கை உச்சி மாநாடு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்திற்கான நிதியுதவி மற்றும் பூமியிலிருந்து கிடைக்கும் எரி பொருட்களை கட்டுப்படுத்துதல் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டது. COP 28 எனும் மாநாடு துபாயில் வசித்து வரும் பெங்களூர் இளைஞருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. உத்வேகமும் அடைந்தார். இதற்காக தானும் தனது பங்குக்கு மனித குலத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார்.
இதற்காக அவர் மாரத்தான் பயணம் மேற்கொண்டார். அவர் நாம் நேரத்தை கடந்து விட்டோம் என்ற வாசகத்துடன் மாரத்தான் பயணம் மேற்கொண்டார். அல் குத்ராவில் உள்ள ஏரியிலிருந்து அதிகாலை தனது பயணத்தை தொடங்கினார் ஆகாஷ். இவர் அப்படியே பாம் ஜூமைரா, புர்ஜ் அல் அரப், கைட் கடற்கரை, ஜூமைரா கடற்கரை, எதிஹாத் மியூசியம் உள்ளிட்ட இடங்களை கடந்தார்.
இப்படியாக துபாயில் முக்கிய அடையாளங்கள் வழியாக வந்த அவர் அந்த நாட்டின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் தனது மாரத்தானை முடித்தார். இவர் செருப்பு அணியாமல் வெறுங்கால்களுடன் 17 மணி நேரம் 20 நிமிடங்களில் 104 கி.மீ. தூரத்தை கடந்தார்.
இதுகுறித்து ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: வானளாவிய கட்டடங்களின் நகரம் துபாய்க்குள் ஒரு 100 கிமீ. மாரத்தான். சூரிய உதயத்திற்கு பிறகு ஓட்டம் தொடங்கியது. காலநிலை மாற்ற பிரச்சினையை தீர்க்கவும், சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் விரும்பியதாக தெரிவித்தார். இவரது முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
சுட்டெரித்த வெயிலில் இவர் 104 கி.மீ. தூரம் ஓடியது பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. துபாயை ஏன் தேர்வு செய்தார் என்பதையும் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அதாவது சர்வதேச COP 28 மாநாடு துபாயில் முடிவடைந்தது. உலகம் 1.5 டிகிரி சென்டிகிரேட்டுக்கு வெப்பமயமாக இன்னும் 5 ஆண்டுகள்தான் இருக்கின்றன. ஆனால் யாருக்கும் அது குறித்து விழிப்புணர்வு இல்லை என தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications