புது தலைவலி.. ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு.. போலீஸ் அதிரடி.. வங்கதேசத்தில் பரபரப்பு
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த சில வாரங்களாக மிக மோசமான வன்முறை நிலவி வந்தது அனைவருக்கும் தெரியும். ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த பிறகே அங்குச் சற்று அமைதி திரும்பி இருக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது இப்போது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தை சில வாரங்களாகவே மாணவர் போராட்டம் புரட்டிப் போட்டது. முதலில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த போராட்டம் மெல்ல அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் திரும்பியது.

போராட்டம்: ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கே பல இடங்களில் போராட்டம் வன்முறையாகவும் மாறியது. இதனால் வேறு வழியின்றி ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்திருந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்ற நிலையில், அங்கே மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
வழக்குப்பதிவு: இதற்கிடையே வங்கதேசத்தில் கடந்த மாதம் நடந்த உள்நாட்டுக் கலவரத்தின் போது போலீஸ் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முந்தைய அரசில் அங்கம் வகித்த டாப் 6 உயர் அதிகாரிகள் மீது வங்கதேச நீதிமன்றம் கொலை வழக்கு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாமூன் மியா என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்யுமாறு டாக்காவில் உள்ள நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர் மாமூன் மியா கூறுகிறார். அடுத்த கட்டமாக இந்த விவகாரத்தில் குற்றவியல் விசாரணையை அந்நாட்டு போலீசார் நடத்துவார்கள் எனத் தெரிகிறது. ஹசீனாவுக்கு எதிராகக் கொலை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications