தொடவே முடியாத இடத்தில் தாரிக் ரஹ்மான்.. வங்கதேசத்திற்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் வெற்றி தான்
டாக்கா: இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையேயான உறவுகள் இப்போது அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தான் தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராகப் பதவியேற்கிறார். அதிலும் அவரது பிஎன்பி கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தாரிக் ரஹ்மான் வருகை வங்கதேசம் மட்டுமின்றி, இந்தியாவுக்கும் ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியா தவிர்க்கவே முடியாத ஒரு அண்டை நாடு என்பதை தாரிக் நன்கு அறிவார். இந்தியாவும் வங்கதேசமும் சுமார் 4,000 கி.மீ. நீளமான எல்லையைப் பகிர்கிறது. வர்த்தகம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து எனப் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் நெருங்கிய தொடர்பில் உள்ளன. அதேநேரம் மாணவர் கலகம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதால் அங்குள்ள இளம் தலைமுறையினர் இந்தியாவைச் சந்தேகத்துடனேயே அணுகுகிறார்கள்.

தாரிக் ரஹ்மான்
இப்போது இந்தியாவுடனான உறவுகளைச் சீரமைப்பது தாரிக்கின் முக்கிய முன்னுரிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா ஏற்கனவே தனது அணுகுமுறையைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தாரிக்கின் தாயாரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது கவலையைத் தெரிவித்தார். மேலும், எந்தவொரு உதவியும் செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். பிஎன்பி கட்சியும் அதற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.
சில நாட்களில் ஜியா மறைந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.. அவர் தாரிக்கைச் சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட கடிதத்தையும் வழங்கினார். எனவே, தற்போதுள்ள முகமது யூனுஸ் அரசைக் காட்டிலும் தாரிக் அரசு இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்துக்கள் பாதுகாப்பு
அடுத்து இந்துக்கள் பாதுகாப்பு. தேர்தலுக்கு முன்பு வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து அனைவருக்கும் தெரியும். அப்போது தாரிக் சமரசமான கண்ணோட்டத்துடன் பேசினார்.. அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்குவேன் உறுதியளித்தார். மதம் என்பது தனிப்பட்ட விருப்பம்; ஆனால் தேசம் அனைவருக்கும் சொந்தமானது என்று தாரிக் குறிப்பிட்டார். இதனால் அங்கு இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தாரிக் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சிக்கல்கள்
தாரிக்கின் தாயார் காலிதா ஜியா வங்கதேசத்தை ஆட்சி செய்த காலகட்டத்தில் இங்கு இந்தியாவில் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். இந்திய- வங்கதேச உறவுகள் மிகவும் மோசமாக இருந்த காலகட்டங்களில் அதுவும் ஒன்று! அந்தக் காலகட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களை வங்கதேசம் கண்டுகொள்ளவில்லை என்றும், வடகிழக்கு கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இந்தியா குற்றம் சாட்டியது. அப்போது தாரிக் அதிகாரப்பூர்வப் பதவி எதிலும் இல்லாவிட்டாலும், திரைமறைவில் சக்திவாய்ந்த ஒரு நபராகக் கருதப்பட்டார்.
அதேபோல ஷேக் ஹசீனா இந்தியாவில் இப்போது அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அதுவும் ஒரு சிக்கலாக உருவெடுக்கலாம் சமீபத்தில் பிஸ்னஸ் டுடே நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஒரு சர்வாதிகாரியை இந்தியா அடைக்கலம் கொடுத்தால், அது வங்கதேச மக்களின் கோபத்தை ஈட்டும்" என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
ஹசீனா விவகாரம்
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, ஹசீனாவை நாடு கடத்த வாய்ப்பு மிக மிகக் குறைவு. இந்தியாவுக்கும் ஹசீனாவுக்கும் இடையேயான உறவு தலைமுறை தாண்டியும் தொடர்கிறது. ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவுடன் நல்லுறவை வைத்திருந்தார். அதையே ஹசீனாவும் தொடர்ந்தார். எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என ஹசீனாவை வெளியேற்றாது.
என்ன தான், இப்படி சில சிக்கல்கள் இருந்தாலும் கூட முகமது யூனுஸ் அரசைக் காட்டிலும் தாரிக் எவ்வளவோ பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். மேலும், எதிர்த்தரப்பில் போட்டியிட்ட அடிப்படைவாத ஜமாத் கட்சி வந்திருந்தாலும் இதை விடப் பெரிய சிக்கல்தான். எனவே, தற்போதுள்ள சூழலில் தாரிக் வெற்றி வங்கதேசத்திற்கு மட்டுமில்லை.. இந்தியாவுக்கும் ஒரு வெற்றி தான்.!
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications