ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேச அரசு மீண்டும் கோரிக்கை
டாக்கா: வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக மாணவர் புரட்சி வெடித்ததையடுத்து ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த நிலையில், ஷேக் ஹசீனாவை விசாரிக்க அந்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவுக்கு வங்கதேச அரசு வாய்மொழி கோரிக்கை அளித்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு எதிராக மாணவர் புரட்சி வெடித்தது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

இதற்கிடையே டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது, ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனா உள்பட அப்போது இருந்த அமைச்சர்கள், ஆலோசகர்கள், ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளுக்கும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. மனித குலம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிராக அவர்கள் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பதால் அவரை நாடு திரும்ப தற்போது வங்கதேச அரசு இந்தியாவுக்கு வாய்மொழி கோரிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வங்கதேச வெளியுறவு ஆலோசகர் கூறுகையில், நீதிமன்ற நடவடிக்கை காரணமாக ஷேக் ஹசீனாவை வங்கதேசம் திரும்ப வாய்மொழியாக இந்தியாவுக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார்.
மேலும் இது தொடர்பாக வங்கதேச உள்துறை ஆலோசகர் ஜஹாங்கீர் ஆலம் கூறுகையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைள் தற்போது செயல்பட்டு வருகிறது. டாக்கா மற்றும் டெல்லி இடையே ஏற்கனவே ஒப்படைப்பு ஒப்பந்தம் உள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி, ஷேக் ஹசீனாவை வங்கதேசம் கொண்டுவர முடியும்” என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications