பாகிஸ்தான் வெட்கப்படனும்.. அடுத்த தலைமுறையாவது மன்னிப்பு கேட்கும்.. கொதித்த வங்கதேச அமைச்சர்
டாக்கா : 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது 3 மில்லியன் அப்பாவி வங்கதேச குடிமக்களை கொன்றதற்காக மன்னிப்பு கேட்காததற்காக பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் கூறியுள்ளார்.
மார்ச் 25, 1971 அன்று நள்ளிரவில் பாக்கிஸ்தான் துருப்புக்களால் முந்தைய கிழக்கு பாகிஸ்தானும் இப்போதுதைய வங்காளதேசத்தில் ஒடுக்குமுறை காரணமாக போர் வெடித்தது.
டிசம்பர் 16 அன்று போர் முடிவுக்கு வந்த நிலையில் பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக்கொண்டதோடு, டாக்காவில் உள்ள இந்தியா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளிடம் நிபந்தனையின்றி சரணடைந்தது.

வங்கதேச போர்
சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒன்பது மாத கால யுத்தத்தின் போது மூன்று மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக அதிகரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 26, 1971ல் "பங்கபந்து" ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்காளதேசத்தை சுதந்திரத்தை அறிவித்தார். ஆண்டுதோறும் வங்காள தேசத்தின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சனிக்கிழமையன்று, ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளும் பிரதமருமான ஷேக் ஹசீனா தலைமையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அமைச்சர் அப்துல் மொமன்
டாக்காவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், தன்மோண்டியில் உள்ள பங்கபந்து நினைவு அருங்காட்சியகம் எதிரே உள்ள தனது தந்தை முஜிபுர் ரஹ்மானின் சுவரோவியத்தில் மாலை அணிவித்தார். இந்நிலையில் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது 3 மில்லியன் அப்பாவி வங்கதேச குடிமக்களை கொன்றதற்காக மன்னிப்பு கேட்காததற்காக பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும்
52வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டாக்காவில் உள்ள வெளிநாட்டு சேவை அகாடமியில் உரையாற்றிய மொமன், 1971ல் வங்காளிகளுக்கு எதிராக செய்த அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்காததற்காக பாகிஸ்தான் "வெட்கப்பட வேண்டும்" என்று கூறியதாக டாக்கா ட்ரிப்யூன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. "அந்த நேரத்தில், பாகிஸ்தானின் இராணுவம் கொடூரமான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை செய்தது. பாகிஸ்தான் அரசாங்கத்தின் அறிக்கைகள் கூட அவர்களின் சித்திரவதைகள் அதிகமாக இருந்ததாக கூறுகின்றன"

குற்றங்களுக்கு மன்னிப்பு
அவர்கள் அனைத்து தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களையும் மீறினர், இஸ்லாமாபாத்தில் உள்ள அரசாங்கம் 1971 இல் செய்த தவறுகளை அங்கீகரிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் மீண்டும் அதே தவறுகளை செய்யக்கூடும் என்றும், பாகிஸ்தானின் அடுத்த தலைமுறை முன் வந்து, தங்கள் மூதாதையரின் குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்கும் என்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications