வங்கதேசத்தை ஓடவிடப்போகும் இந்தியா? கண்கள் சிவக்க ஜெய்சங்கர் தந்த கடும் வார்னிங்.. அலறும் அண்டை நாடு

Subscribe to Oneindia Tamil

டாக்கா: இந்தியாவுடன் நல்ல உறவு வேண்டும் என்று கூறி கொண்டு அபத்தமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சரியல்ல. இந்தியாவுடன் நல்ல உறவு வேண்டுமா? இல்லையா? என்பதை வங்கதேசம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் வார்னிங் கொடுத்துள்ளார். இதன்மூலம் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி விட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

bangladesh india jaishankar

வங்கதேசத்தில் வெடித்த போராட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கு இடையேயான உறவு என்பது சிதைந்து விட்டது. நம் நாட்டை தொடர்ந்து அவர் சீண்டி வருகிறார். எல்லையில் உளவு ட்ரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கிறார்.

அதுமட்டுமின்றி முகமது யூனுஸ் தனது ஆதரவாளர்களை வைத்து நம் நாட்டின் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை பிடித்து விடுவோம் என்று சீன் போட்டு வருகிறார். இதனால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு என்பது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மோசமாகி வருகிறது. அதேவேளையில் பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான உறவு பலமடங்கு மேம்பட்டுள்ளது. வங்கதேச வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாகிஸ்தான் - வங்கதேசம் இணைந்து செயல்படுகின்றன.

கடந்த 54 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு பிரிவு அதிகாரிகள் வங்கதேசம் சென்றனர். அதேபோல் வங்கதேச ராணுவ அதிகாரிகளும் பாகிஸ்தான் சென்று வருகின்றன. இருநாடுகளும் ஒன்றோடொன்று இணைந்து செயல்பட தொடங்கி உள்ளது. இது நம் நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சனையாக பார்ககப்படுகிறது.

இவை எதற்கும் நம் நாடு இன்னும் பதிலடி கொடுக்கவில்லை. அமைதியாக இருந்து வருகிறது. இதனால் எல்லாவற்றுக்கும் மேலாக வங்கதேசத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு நம் நாடு தான் காரணம் என்று முகமது யூனுஸ் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அதன்பிறகு இந்தியாவுடன் நல்ல உறவில் இருப்பதாக அவர்களே சொல்லிக்கொள்கின்றனர். இந்த இரட்டை நிலைப்பாட்டுக்கு தான் தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வார்னிங்குடன் வங்கதேசத்துக்கு முக்கிய மெசேஜை அனுப்பி உள்ளார்.

இந்நிலையில் தான் நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மஸ்கட்டில் வைத்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை விவகாரத்துறையின் ஆலோசகர் தவ்ஹித் உசேனை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையேயான உறவு பற்றி 2 பேரும் விவாதித்தனர். அப்போது வங்கதேசத்துக்கு நேரடியாக ஜெய்சங்கர் எச்சரிக்கை செய்துள்ளார். இதன்மூலம் வங்கதேசத்துக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தயாராகி விட்டது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஏனென்றால் வங்கதேசம் தொடர்ந்து சீண்டி வரும் நிலையில் மத்திய அரசு மவுனமாக இருந்தது. தற்போது ஜெய்சங்கர் வங்கதேசத்துக்கு வார்னிங் செய்துள்ளது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தவ்ஹித் உசேனை சந்தித்த மறுநாள் நடந்த நிகழ்ச்சியில் இதுபற்றி ஜெய்சங்கர் கூறியதாவது:

‛‛தினமும் வங்கதேசத்தின் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இந்தியா மீது குற்றம்சாட்டி வருகின்றனர். அங்கு நடக்கும் எல்லா விஷயத்துக்கு இந்தியா மீது பழிபோடுகின்றனர். இதனை பார்த்தால் மிகவும் அபத்தமானதாக இருக்கிறது. ஒருபுறம் இந்தியாவுடன் நல்ல உறவை விரும்புகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால் காலையில் எழுந்து பார்த்தால் அனைத்துக்கும் இந்தியா தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இது ரொம்ப தவறானது. இந்த விஷயத்தில் வங்கதேசம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தியாவுடனான உறவை வங்கதேசம் மனதில் நினைத்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்தியா - வங்கதேசத்தின் உறவு நீண்டகால வரலாற்றை கொண்டது. வங்கதேசத்தின் வரலாற்றின் முக்கிய நிகழ்வான 1971ல்

(பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா உதவியுடன் வங்கதேசம் தனிநாடாக உதயமான ஆண்டு) இருந்தே இந்தியாவுக்கு அந்த நாட்டுடன் ஸ்பெஷலானஉறவு உள்ளது. நமக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான இருதரப்பு உறவு எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முதல் அம்சம் என்னவென்றால் சிறுபான்மையினர் மீதான வகுப்புவாத தாக்குதல்கள். இது நம் நாட்டுக்கு தொந்தரவாக உள்ளது. இதுபற்றி நாம் பேச வேண்டிய உள்ளது. 2வது விஷயம் வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம். உள்நாட்டு விவகாரங்களில் அரசியல் உள்ளது. இப்படியான சூழலில் அண்டை நாடான நம்மை பற்றி அவர்கள் தெளிவான கண்ணோட்ட முடிவை எடுக்க வேண்டும்'' என்றார்.

இதன்மூலம் இந்தியாவுடன் நல்ல உறவு வேண்டுமா? வாருங்கள் தொடரலாம். இந்தியாவை எதிர்க்க வேண்டுமா? தாராளமாக எதிர்த்து நில்லுங்கள். உங்களை எப்படி டீல் செய்ய வேண்டுமோ அப்படி இந்தியா பார்த்து கொள்ளும் என்பதை தான் ஜெய்சங்கர் எச்சரிக்கையாக கூறியுள்ளார். இதனால் வங்கதேசம் அலற தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+