Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு எதிராக வாய்ச்சவடாலை குறைக்கணும்.. முகமது யூனுஸை நேரடியாக எச்சரித்த மோடி! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

பாங்காக்: இந்தியா - வங்கதேசம் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கு வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தான் முக்கிய காரணம். இந்நிலையில் தான் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடியை, வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் சந்தித்து பேசினார். இந்த வேளையில் இந்தியாவுக்கு எதிராக வாய்ச்சவடால் கூடாது என்று பிரதமர் மோடி நேரடியாக வார்னிங் செய்துள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது. இது வன்முறையாகி கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

bangladesh-shoud-be-avoid-rhetoric-which-is-cracks-2-nations-good-relationship-pm-modi-warns-to-muh

இதையடுத்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது. அதன் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் என்பது வலுக்க தொடங்கி உள்ளது.

ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் முகமது யூனுஸ் பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறார். இதனால் வங்கதேசம் - இந்தியா இடையேயான உறவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விரிசல் ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் முதல் முறையாக வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

அதாவது தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் BIMSTEC அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முகமது யூனுஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருதலைவர்களும் அருகருகே அமர்ந்திருந்தனர். அதன்பிறகு மாநாட்டின் ஒருபகுதியாக மோடி - முகமது யூனுஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் இருநாடுகளின் உறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி இருதலைவர்களும் விவாதித்தனர்.

இந்த வேளையில் பிரதமர் மோடி நேரடியாக வங்கதேசத்துக்கு வார்னிங் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது முகமது யூனுஸ் சமீபத்தில் சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசியிருந்தார். மேலும் அந்த நாட்டின் தொழிலதிபர்களிடம் பேசி முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பேசியிருந்தார். இந்த சமயத்தில் அவர் வடகிழக்கு மாநிலங்களை இழுத்து கருத்து தெரிவித்து இருந்தார். அதாவது வங்கதேசம் தான் கடல் பாதுகாப்பில் முதன்மையாக உள்ளது. இங்கு முதலீடு செய்து தொழில் தொடங்குவதன் மூலம் நம் வடகிழக்கு மாநிலங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் மறைமுகமாக சீனாவிடம் எடுத்துரைத்து இருந்தார். இதற்கு நம் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதுபற்றி பிரதமர் மோடி இன்று முகமது யூனுஸிடம் பேசி எச்சரிக்கை செய்துள்ளார். அதாவது இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை கூற வேண்டாம் என்று பிரதமர் மோடி நேரடியாக தெரிவித்துள்ளார்.இதுதவிர வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறையை தொடர்ந்து அந்த நாட்டில் இருக்கும் இந்துக்கள் உள்பட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதியளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி, முகமது யூனுஸிடம் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயக செயல்பாடு உள்ளிட்டவற்றுக்கு இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அதேவேளையில் முகமது யூனுஸ், இந்தியாவுடன் நேர்மையான, ஆக்கப்பூர்வமான உறவை விரும்புவதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

இதனை நம் நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறுகையில், ‛‛வங்கதேசத்தின் அமைதி, ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் வகையில் உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். இருநாடுகளின் உறவை சீர்க்குலைக்கும் வகையிலான கருத்துகளை தவிர்ப்பது நல்லது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான வாய்ச்சவடாலை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி நேரடியாக முகமது யூனுஸிடம் கூறியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+