பாகிஸ்தானுக்கு விழுந்த அடி.. ‛ஆபரேஷன் சிந்தூரால்’ பயந்த முகமது யூனுஸ்! வங்கதேசம் செய்றதை பாருங்க
டாக்கா: ‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்களை நம் நாடு வெற்றிகரமாக அழித்தது. பாகிஸ்தானுக்கு விழுந்த இந்த அடியை பார்த்து நம் நாட்டிடம் வம்பிழுத்து வரும் வங்கதேசம் கதிகலங்கி போய் உள்ளது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் தாக்குதலை சமாளிக்க வேண்டும் என்பதற்காக பிரிட்டனிடம் இருந்து ரூ.7,700 கோடி மதிப்பிலான வான்வெளி பாதுகாப்பு சிஸ்டமை வாங்க முடிவு செய்துள்ளது. வங்கதேசம் வாங்கும் இந்த புதிய வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம் என்பது என்ன? இது எங்கு பயன்பாட்டில் உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்கமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதற்கு மே 7 ம் தேதி நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து இருநாடுகள் இடையே மோதல் அதிகரித்தது.

பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதோடு நம் நாடு நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது நம் நாடு ட்ரோன், பிரமோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக கடந்த மாதம் 10ம் தேதி அதிகாலையில் பிரமோஸ் ஏவுகணைகளை வைத்து நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தானின் முக்கிய விமான தளங்கள் பெரும் சேதத்தை எதிர்கொண்டன. இதையடுத்து தான் பாகிஸ்தான் நம் நாட்டிடம் மண்டியிட்டது. மோதலை கைவிடும்படி நம் நாட்டிடம் கெஞ்சியது. அதன்பிறகு தான் மோதல் முடிவுக்கு வந்தது.
பாகிஸ்தானிடம் அணுஆயுதம் உள்ளது. அதேபோல் இந்தியாவை ராணுவ படை, விமானப்படை, கப்பற்படை உள்ளிட்டவையும் இருக்கின்றன. மேலும் ஏவுகணை, ட்ரோன்களை வானிலேயே தாக்கி அழிக்கும் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை பாகிஸ்தான் வைத்துள்ளது. ஆனாலும் கூட நம் நாடு அவை அனைத்தையும் தாண்டி பாகிஸ்தானை அதிரடியாக ‛அட்டாக்' செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான நம் நாட்டின் இந்த நடவடிக்கை அண்டை நாடான வங்கதேசத்தை கலங்க வைத்துள்ளது. வங்கதேசம் - இந்தியா இடையேயான உறவு இப்போது மோசமாகி உள்ளது. குறிப்பாக வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறையை தொடர்ந்து சேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்தார். இதையடுத்து வந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம் நாட்டை சீண்டி வருகிறார்.
இப்போது பாகிஸ்தானை போட்டு நாம் அடித்த அடியில் முகமது யூனுஸ் கதிகலங்கி உள்ளார். மேலும் நம்மையும் இந்தியா ‛அட்டாக்' செய்து விடுமோ? என்ற அச்சத்தில் முகமது யூனுஸ் இருக்கிறார். இதனால் நம் நாட்டின் ஏவுகணை, ட்ரோன்களை வானிலேயே கண்டுபிடித்து அழிக்கும் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. இதற்காக முகமது யூனுஸ் லண்டனுக்கு பிரதிநிதிகளை அனுப்பி உள்ளார்.
வங்கதேசத்தின் உயர் ராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரலும் முகமது கம்ரூல் ஹசன் தலைமையில் வங்கதேசம் குழு லண்டனுக்கு பறந்துள்ளார். இதில் முகமது கம்ரூல் ஹசன் ரங்க்பூர் ஏரியாவின் கமாண்டராகவும், 66வது இன்பேன்ட்ரிடிவிஷனின் ஜெனரல் கமாண்டிங் ஆபிசராகவும் உள்ளார். லண்டனில் 19 வது ஃபுல் ஸ்பெக்ட்ரான் ஏர் டிபென்ஸ் மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குழுவில் ராணுவத்தினர் மட்டுமின்றி விமானப்படை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.
அதன்படி பிரிட்டனின் ஸ்கை சேபர் அமைப்பை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடுத்தர மற்றும் நிலத்தில் இருந்து செயல்படும் ஏர் டிபென்ஸ் சிஸ்டம் ஆகும். இதனை பிரிட்டன் தான் தயாரித்துள்ளளது. கடந்த 2021ம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டது. இதன் விலை என்பது 900 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது ரூ.7,700 கோடியாகும். இந்த ஏர் டிபென்ஸ் சிஸ்டம் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை கண்டுபிடித்து அழிக்கும் தன்மை கொண்டது. இது தற்போது நேட்டோவின் கிழக்கு பகுதிகளான பால்க்லேண்ட் தீவு மற்றும் போலந்து உள்ளிட்ட இடங்களை பாதுகாக்கும் வகையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனை வாங்க வங்கதேசம் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications