Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேச கிளாமர் நடிகை கைது.. போலீஸின் அதிரடி ஆக்ஷனுக்கு காரணம் இதுவா!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் சமீபத்தில் அரசியல் சலசலப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் கிளாமர் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதமாகியிருக்கிறது.

சவுதி-வங்கதேச உறவில் எழுந்த சிக்கல்தான் இவரது கைதுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. நடிகையின் கைதுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

Bangladesh Dhaka Saudi

மேக்னா ஆலம் வங்க தேசத்தின் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். மாடலிங் துறையிலிருந்து நடிகையாக வந்த இவர், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், பாலின சமத்துவ ஆதரவாளர், Miss Bangladesh Foundation அமைப்பின் தலைவர், சமூக மற்றும் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசும் நபர் என்றும் அறியப்படுகிறார். எனவே இயல்பாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இப்படி இருக்கையில்தான் இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி நள்ளிரவு இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. நள்ளிரவு டாக்காவில் உள்ள ஆலமின் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு புகுந்த போலீஸ், அவரை கைது செய்திருக்கிறது.

இந்த கைதுக்கு காரணம் சவுதி-வங்கதேச இடையேயான உறவுதான் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சவுதி தூதர் ஒருவருடன் இவர் காதலில் இருந்திருக்கிறார். ஆனால் தூதருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறது. இந்த விஷயம் தெரிந்த பின்னர் ஆலம் உறவை முறித்துக்கொண்டிருக்கிறார். இது குறித்து தனது பேஸ்புக் பதிவில் விஷயத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான் விஷயம் சவுதி-வங்கதேசம் இடையேயான பிரச்சனையாக வெடித்தது.

சம்பந்தப்பட்ட தூதர் இது தொடர்பாக வங்கதேச அரசிடம் முறையீடு செய்திருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே ஆலமை போலீஸ் கைது செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கைக்கு வங்கதேச மக்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். ஒரு பெண் உண்மையை பேசினால் கைது செய்வீர்களா? கைது செய்ய என்ன உரிமை இருக்கிறது? இந்த கைது நடவடிக்கை சட்டரீதியானது கிடையாது என்று கொந்தளித்தனர். சோஷியல் மீடியாக்களில் இது கடும் விவாதமாக வெடித்தது. வங்கதேசத்தில் அமைந்திருப்பது புதிய அரசு. எனவே இந்த அரசின் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவும், மக்களின் கோபத்தை கட்டுப்படுத்தவும், ஆலமை கைது செய்த அதிகாரியை அரசு சஸ்பெண்ட் செய்தது.

இருந்தாலும் மக்களின் கோபம் குறையவில்லை. அதேபோல, Prothom Alo, The Daily Star போன்ற வங்கதேச பத்திரிகைகளும் ஆலமின் கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. வங்கதேசத்தின் அரசின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ரூல் உள்ளிட்டோர் ஆலமின் கைதுக்கு அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+