வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது மகளுக்கு மீண்டும் பிடிவாரண்ட் - நீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

ஹாக்கா: ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வங்கதேசத்தில் வெடித்த மாணவர்கள் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. உடனடியாக நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் தந்தது. ஷேக் ஹசீனாவை மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு இதுவரை பதிலளிக்காமல் உள்ளது.

Sheikh hasina corruption case

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா உள்ளிட்ட 17 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. வங்காளதேச கோர்ட்டுகளில் ஷேக் ஹசீனாவுக்கு ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியான புர்பாச்சலில் அரசு நிறுவனம் சார்பில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தை மோசடியாக வாங்கியது தொடர்பாக ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக டாக்கா பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த ஊழல் தொடர்பாக அந்த நாட்டின் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஷேக் ஹசீனாவின் மகளான சைமா, புதிய நகர வீட்டுவசதி திட்டத்தில் சட்ட விதிகளை மீறி வீட்டு மனையை பெற்றதாகவும் இதற்கு ஷேக் ஹசீனா தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மேலும், வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிப்பீர் ரகுமானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துக்காக 4 ஆயிரம் கோடி ரூபாயை வீண் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கை நீதிபதி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஷேக் ஹசீனா, அவரது மகள் சைமா உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை அறிக்கையை அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு ஊழல் தடுப்பு கமிஷனுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+