தடை செய்யப்பட்ட 'இந்தியாவின் மகள்' படத்தை அமெரிக்காவில் வெளியிட்ட ஹிலாரியின் என்ஜிஓ
நியூயார்க்: இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்தியாவின் மகள் ஆவணப்படம் அமெரிக்காவில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் அமைப்பின் உதவியுடன் திரையிடப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி நிர்பயா மைனர் உள்பட 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த லெஸ்லீ உட்வின் என்பவர் நிர்பயா பற்றிய ஆவணப்படத்தை எடுத்தார்.

பேட்டி
ஆவணப்படத்திற்காக லெஸ்லீ நிர்பயா வழக்கில் சிறையில் உள்ள முகேஷ் சிங் உள்ளிட்ட குற்றவாளிகளை பேட்டி கண்டுள்ளார். அதில் முகேஷ் சிங்கோ, பலாத்காரத்திற்கு நிர்பயா தான் காரணம். அவர் போராடாமல் அமைதியாக அனுமதித்திருந்தால் தாக்கியிருக்க மாட்டோம் என்று திமிராக பேட்டியளித்துள்ளார்.

தடை
இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் படத்தை அமெரிக்காவில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பருச் கல்லூரியில் திங்கட்கிழமை இந்தியாவின் மகள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஹில்லாரி
ஆவணப் படத்தை திரையிட முன்னாள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனின் வைட்டல் வாய்சஸ் என்ற என்ஜிஓ ஏற்பாடு செய்திருந்தது.

மெரில் ஸ்ட்ரீப்
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை நிர்பயாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 12 மெழுகுவர்த்திகளை ஏற்றினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், ஜோதி சிங்(நிர்பயாவின் நிஜ பெயர்) இந்தியாவின் மகளாக இருந்தார். இன்று இரவு நம் மகளாகவும் ஆகிவிட்டார் என்றார்.

ப்ரீடா பின்டோ
இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இது ஒன்றும் இந்தியாவை அவமதிக்கும் ஆவணப்படம் இல்லை என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ப்ரீடா பின்டோ தெரிவித்துள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications