5 நிமிஷ அதகளம்.. நேரில் பார்த்தவர்களின் "திக் திக்" நிமிடங்கள் #barcelonaattack
பார்சிலோனாவில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து நேரில் பார்த்தவர்கள் தங்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
பார்சிலோனா: பார்சிலோனாவில் கூட்டத்தில் வேன் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் 5 நிமிடங்களில் நடந்த முழுமையான பயங்கரவாதம் என்று தெரிவித்துள்ளனர்.
பார்சிலோனா ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் சாலையை கடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த வேன் திடீரென பாய்ந்தது. வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த திக் திக் நிமிடங்கள் குறித்து பணி முடித்துவிட்டு தன்னுடன் பணிபுரிவோருடன் சென்று கொண்டிருந்த கார்லஸ் டீனா (34) கூறுகையில், தீவிரவாதிகள் செலுத்திய வேன் கட்டுக்கடங்காமல் மக்கள் கூட்டத்தில் தறிகெட்டு ஓடியது. அப்போது மிக மோசமான நிலையில் தனது தாய் மீது சாய்ந்திருத்த சிறுவனை பார்ததேன். அந்த தாய் என்னால் உதவமுடியுமா என்று கண்ணால் பேசியதைக் கண்டவுடன் எனது இதயமே நொறுங்கியது என்றார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்சிலோனாவில் உள்ள பூக்கடையில் பணியாற்றும் ஜோஸ் மோயா (51) என்பவர் கூறுகையில், தீவிரவாதிகள் செலுத்திய வேன் எனக்கு மிகவும் அருகில் சென்றது. கைக்கு எட்டும் தூரத்தில்தான் வேன் சென்றது. அது வேகமாக சென்று மக்கள் கூட்டத்தில் புகுந்து அவர்களை இழுத்து தள்ளியது. மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். 5 நிமிடங்களுக்குள் அனைத்தும் நடந்து விட்டது என்றார் அவர்.
இதுபோல் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் திகிலூட்டும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கடந்த 2004-ஆம் ஆண்டு இதுபோன்ற ஒரு மோசமான வெடிகுண்டு தாக்குதலால் 192 பேர் கொல்லப்பட்டனர். 2000 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஜூலை 2016-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளான நைஸ், பெர்லின், ஸ்டாக்ஹோம் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications