அந்த 14 நிமிடங்கள்.. இதுதான் கடைசி பேச்சு.. பிடனும் - கானியும் என்ன பேசினார்கள்.. பகீர் தகவல்கள்
கடைசியாக அதிபர் பிடனும் கானியும் 14 நிமிடங்கள் பேசினார்களாம்
காபூல்: அமெரிக்க படைகள் அனைத்துமே வெளியேறிவிட்ட நிலையில் புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அஷ்ரப் கானியும், ஜூலை 23ம் தேதி கிட்டத்தட்ட 14 நிமிடங்கள் பேசினார்களாம்.
20 வருடங்களாக இல்லாமல் திடீரென்றுதான் அமெரிக்க படைகள் பின்வாங்கின.. ஆப்கன் அரசியலை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு இது தோல்விதான்.. சறுக்கல்தான்.
ஆனால், தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றுவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அப்போதைய அதிபர் அஷ்ரப் கனியும் தொலைபேசியில் நடத்திய உரையாடல்கள் தெரியவந்துள்ளது..

ராணுவ உதவிகள்
அந்த பேச்சில், ராணுவ உதவிகள், அரசியல் வியூகங்கள் பற்றியெல்லாம் எப்படி பகிர்ந்து கொள்வது என்பது குறித்த உத்திகள் விவாதிக்கப்பட்டதாம்.. இப்படி இந்த அளவுக்கு இறங்கி போய் தலைவர்கள் பேசினாலும், நாட்டை தாலிபான்கள் கைப்பற்றுவார்கள் என்று 2 பேருக்குமே தெரியாதாம்.. ஜூலை 23-ம்தேதியன்றுதான் இவர்கள் போனில் பேசியுள்ளனர்..

14 நிமிடங்கள்
இதுதான் கடைசி பேச்சுவார்த்தையும்கூட.. சுமார் 14 நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள்.. அப்போது ஆப்கானிஸ்தானில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர தன்னிடம் ஒரு பிளான் இருப்பதாக கனி வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார்.. அந்த பிளானுக்கு உதவி செய்வதாக பிடனும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திறமையான ராணுவம்
அதுமட்டுமல்ல, ஆப்கன் பாதுகாப்பு படையை பிடன் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார்.. "உங்ககிட்ட திறமையான ராணுவம் இருக்கிறது, 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் தாலிபான்களை எதிர்க்க 3,00,000 படைகளை கொண்டிருக்கிறது ஆப்கானிஸ்தான்.. எனவே போரை நடத்த அவர்களிடம் முழு சக்தியும் உள்ளது.. தாலிபான்களுக்கு எதிரான போர் சிறப்பாக நடக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன்..

தாக்கம்
ஆனால், புதிய ராணுவ திட்டம் இருப்பதாக ஆப்கனின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கலாம்.. இது கண்டிப்பாக ஒரு தாக்கத்தை உருவாக்கும்.. உங்கள் அரசை நீட்டிக்க செய்ய, அரசியல் பொருளாதார, தூதரக ரீதியாக கடுமையான போரை தொடர்ந்து நடத்த போகிறோம்" என்றாராம் பிடன். இப்படி இவர்கள் போனில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சில நாட்கள் முன்புதான், அமெரிக்க விமான படை தாக்குதல் நடத்தப்பட்டது.. அப்போதுதான் தோஹா அமைதி ஒப்பந்தத்திற்கு எதிரானது என்று அதை தாலிபன்களும் விமர்சித்திருந்தனர்..

அதிபர் கனி
இதற்கு பிறகுதான் அதாவது ஆகஸ்ட் 15-ம்தேதி தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பு, அப்போதைய அதிபர் கனி அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்... இதற்கு பிறகு, ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்களும், 13 அமெரிக்க படைகளும் அங்கிருந்து வெளியேறியது.. அதேபோல, காபூல் ஏர்போர்ட்டில் நடந்த தாக்குதலிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications