For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை கொன்னுடுங்க... குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி

Google Oneindia Tamil News

நாய்பிடாவ்: சர்ச்சில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற மியான்மர் ராணுவத்திடம் கன்னியாஸ்திரி ஒருவர் கை கூப்பிக் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும், கைதும் செய்யப்பட்டனர்.

Begged them not to hurt children Nun kneels in front of Myanmar police to stop violence

மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயலைக் கண்டித்து அந்நாடு முழுவதும் கடும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. அதை ஒடுக்க ராணுவம் தரப்பில் இணைய சேவையை முடக்குவது, துப்பாக்கிச் சூடு என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருந்தாலும், மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் செல்கிறது. இதுவரை போராட்டத்தில் பங்கேற்றவர்களில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது மியான்மர் ராணுவ வீரர்களிடம் மண்டியிட்டு கை கூப்பி கன்னியாஸ்திரி ஒருவர் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

கன்னியாஸ்திரியின் செயலை சற்று எதிர்பாராத இரண்டு ராணுவ வீரர்கள் அவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி கூறுகையில், "நான் அவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சினேன். குழந்தைகளைச் சுட்டு சித்திரவதை செய்ய வேண்டாம் என்று கெஞ்சினேன், அதற்குப் பதிலாக என்னைச் சுட்டுவிடுங்கள் என்றேன்" என்று அவர் தெரிவித்தார். இவரது இந்த புகைப்படம் காண்போரை கலங்கச் செய்கிறது.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க தன்னுயிரைப் பொருட்படுத்தாத கன்னியாஸ்திரியின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை மியான்மர் போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 60 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல 1,600க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

English summary
A nun went down on her knees in front of policemen in a northern Myanmar town and pleaded with them to stop shooting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X