20 வயசுதான்.. தந்தையை போன்ற கனிவு...குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வீரரின் கர்ப்பிணி மனைவி உருக்கம்
: குண்டுவெடிப்பில் உயிரிழந்த வீரருக்கு கர்ப்பிணி மனைவி அஞ்சலி செலுத்தி உள்ளார்
காபூல்: ஆப்கன் தாக்குதலில் உயிரிழந்த வீரருக்கு அவருடைய, கர்ப்பிணி மனைவி, உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியை செலுத்தி உள்ளார்.
ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதில் இருந்தே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களை உடனே தொடங்கிவிட்டார்கள்.. நாளைதான் கெடு வைத்திருக்கிறார்கள்..
அதாவது ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர்.. அதனால், அங்கிருக்கும் மக்களை வெளியே அழைத்து வரும் பணிகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

காபூல்
ஆனாலும் ஆங்காங்கே குண்டுகள் வெடித்து கொண்டிருக்கின்றன.. ஏராளமானோர் உயிரிழந்தும் வருகின்றனர்.. கடந்த வெள்ளிக்கிழமையும் இப்படித்தான் தாக்குதல் நடந்துள்ளது.. காபூல் ஏர்போர்ட் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்தினர்... இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பிரிவின் கிளை அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் பொறுப்பேற்றுள்ளனர்...

தாக்குதல்
இந்த திடீர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானியர்கள் 169 பேரும், அமெரிக்க படையைச் சேர்ந்த 13 பேரும் உயிரிழந்தனர்... அதுமட்டுமல்ல, 2 பத்திரிகையாளர்களும், 2 தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பல உருக்கமான மற்றும் நெஞ்சை பிசையும் தகவல்கள் வெளியாகி வருகின்றன..

ஆப்கன்
அப்படித்தான், தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்கா மரைன் படை சார்ஜென்ட் நிக்கோல் எல் ஜீ என்பவர் ஆவார்.. இவர் அந்த தாக்குதலில் உயிரிழப்பதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்புதான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ பதிவிட்டிருந்தார்.. அதில், ஆப்கன் குழந்தை ஒன்றை கையில் வைத்திருப்பது போன்ற போட்டோவைதான் 23 வயதான நிக்கோல் பதிவிட்டிருந்தார்.. அதுமட்டுமல்ல, "நான் எனது வேலையை காதலிக்கிறேன்" என்றும் பதிவிட்டிருந்தது பலரையும் உருக்கிவிட்டது.

தாக்குதல்
அதுபோலவே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.. ஒரு இளம் கர்ப்பிணியின் கணவரும் இந்த தாக்குதலில் இறந்துவிட்டார்.. அவர் பெயர் மெக்கல்லம்... 20 வயதுதான் ஆகிறது.. அனைத்து வீரர்களும் ஒன்றுகூடி மெக்கல்லனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.. மெகல்லமின் மனைவி நிறைமாத கர்ப்பிணியான ஜியானா க்ரேட்டன், தனது கணவருக்கு உணர்ச்சிபூர்வமான அஞ்சலி செலுத்தியது காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது.

சிறந்த தந்தை
அடுத்த மாதம் பிரசவம் ஆக உள்ள நிலையில், தன் குழந்தையை பார்க்காமலேயே வீரர் உயிரிழந்துவிட்டார்.. இந்த குழந்தை மீது, இளம் வீரர் உயிரையே வைத்திருந்தாராம்.. இதைபற்றி ஜியான க்ரேட்டன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், "நான் எனது சிறந்த நண்பரை இழந்துவிட்டேன்... இந்நேரம் அவர் உயிருடன் இருந்திருந்தால், சிறந்த அப்பாவாக இருந்திருப்பார்.. அவரை என் கணவர் என்று சொல்லி கொள்வதில் பெருமை கொள்கிறேன்.. தங்களையே மாய்த்து கொள்ளும் இதுபோன்ற வீரர்கள்தான், குடும்பத்தின் ஹீரோக்கள்" என்று உருக்கத்துடனும் பெருமையுடனும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

உருக்கம்
மெக்கல்லமின் நண்பர்களில் ஒருவரான ரெஜி ஸ்டோன் என்பவர் சொல்லும்போது, மெக்கல்லம் நெகிழ்ச்சியான நபர்.. புத்திசாலி, தைரியமானவரும்கூட.. தன் குடும்பத்தை அளவுக்கு அதிகமாக நேசித்தவர் என்று புகழாரம் சூட்டி உள்ளார்"... இப்படி ஒரு குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தபோது, காபூல் ஏர்போர்ட் அருகே இருந்த செக்போஸ்டில் மெக்கல்லம் தீவிரமாக பணியாற்றி கொண்டிருந்தாராம்.. இப்படி உயிரிழந்த ஒவ்வொரு வீரர்களை பற்றியும் உருக்கமான தகவல்கள் வெளிவந்தபடியே உள்ளன.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications