"புதின் ஒரு கொடூர கொலைகாரன்! இனியும் பதவியில் தொடரக்கூடாது!" உக்ரைன் எல்லையில் திடீரென ஆவேசமான பைடன்
கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் பைடன் போலந்தில் உள்ள உக்ரைன் அகதிகளைச் சந்தித்துப் பேசினார்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் போதிலும், இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் போர் தொடர்கிறது.

உக்ரைன் போர்
உக்ரைன் போர் தொடங்கியது முதலே இதை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடவில்லை. அதேநேரம் உக்ரைன் நாட்டிற்குத் தொடர்ச்சியாக அதிநவீன ஆயுதங்களை அளித்து உதவி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் பைடன் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சென்ற ஜோ பைடன், உக்ரைனிலிருந்து தப்பி போலந்துக்கு அகதிகளாக வந்தவர்களைச் சந்தித்து பேசினார்.

பைடன் உறுதி
அதைத் தொடர்ந்து போலந்து தலைநகர் வார்சாவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ரஷ்யா தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்த முடிவு செய்தால் நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாக்க அமெரிக்கா எப்போதும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், நேட்டோ பிரதேசத்தின் சிறு அங்குலத்தைக் கூட ஆக்கிரமிக்க ரஷ்யா யோசிக்க வேண்டாம் என்றும் பைடன் எச்சரித்தார்.

அதிகாரத்தில் இருக்கக் கூடாது
தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் பைடன், "இந்த மனிதர் [புதின்] இனியும் அதிகாரத்தில் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது" என்று ஆவேசமாகப் பேசினார். புதினை அதிபர் பதவியில் இருக்கக் கூடாது என்பது குறித்த பைடனின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. புதின் தனது அண்டை நாடுகள் மீது அதிகாரத்தைச் செலுத்த அனுமதிக்க முடியாது என்பதையே அமெரிக்க அதிபர் கூற வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கொடூர கொலைகாரன்
முன்னதாக, அதிபர் பைடன் போலந்து தலைநகர் வார்சாவில் உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஓலெக்ஸி ரெஸ்னிகோவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். போர் தொடங்கிய பின்னர் அமெரிக்க அதிபர் உக்ரைன் முக்கிய தலைவர்களை நேருக்கு நேர் சந்தித்து விவாதம் நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து வெளியேறிய அகதிக் குடும்பங்களைச் சந்தித்த பைடன், "அவர் (புதின்) ஒரு கொடூர கொலைகாரன்" என்றும் கடுமையாகத் தாக்கி பேசினார்.

ரஷ்ய மக்கள் எதிரிகள் இல்லை
இது குறித்து அதிபர் பைடன் மேலும் பேசுகையில், "ஒரு நீண்ட போராட்டத்திற்கு உலகம் தயாராக வேண்டும். இந்தப் போர் ஏற்கனவே ரஷ்யாவிற்கு ஒரு தோல்விகளுமானதாக மாறிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை. விளாடிமிர் புதின் நேட்டோ பிரதேசத்தின் ஒரு அங்குலத்தை ஆக்கிரமிப்பது தொடர்பாக யோசிக்கக் கூடக் கூடாது. இதுவரை உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா தெரியவில்லை. புதின் நடவடிக்கையைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். ரஷ்ய மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல" என்றார்.

பாதுகாப்போம்
மேலும் போலந்து உட்பட நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் அனைத்து நாடுகளையும் அமெரிக்கா நிச்சயம் பாதுகாக்கும் என்றும் அதிபர் பைடன் மீண்டும் உறுதி அளித்தார். அதேநேரம் அண்டை நாடான உக்ரைன் போரினால் ஏற்படும் அகதிகள் நெருக்கடியின் சுமையை போலந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் சுமந்திருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். அப்போது போலந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகள் சுதந்திரமாக இருப்பது ரஷ்யாவுக்கு முக்கியம் என்பதை அதிபர் பைடன் குறிப்பிட்டார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications