ஆடையின்றி.. கோயிலுக்குள் நிர்வாணமாக சுற்றி வந்து.. தொட்டு தொட்டு கும்பிட்ட பரிதாப பெண்.. அடக்கடவுளே
ஜாகர்த்தா: கோவிலுக்குள் இளம்பெண் ஒருவர் திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. இந்த சம்பவ நடக்கும்போது, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் இருந்ததால், அனைவருமே அதிர்ச்சியாகி விட்டனர்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ளது பிரபலமான அந்த கோயில்.. சுற்றுலாப் பயணிகளின் மிக முக்கிய தலமாகவும் இந்த கோயில் உள்ளது... அதனால், ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து சென்று கொண்டேயிருப்பார்கள்...

நிர்வாண கோலம்: அந்த வகையில், இளம்பெண் ஒருவர் கோயிலுக்குள் சென்றுள்ளார்.. இவர் ஜெர்மனியை சேர்ந்தவர்.. இங்கு டூர் வந்திருக்கிறார்.. அதனால், இந்த கோயிலுக்குள் நுழைந்து, கோயிலில் சுற்றியுள்ளார்... அப்போது திடீரென தன்னுடைய ஆடைகளை கழற்றி விட்டு, வித்தியாசமாகவும், வினோதமாகவும் நடந்துகொள்ள ஆரம்பித்தார்.. நிர்வாண கோலத்திலேயே கோயிலையும் சுற்றி சுற்றி வந்து, கும்பிட்டார்..
நிர்வாணமாக இளம் பெண், நடந்து செல்வதை பார்த்து கோயிலில் இருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்... இதனால், கோயில் நிர்வாகத்தினர் என்ன செய்வதென்று, உடனடியாக போலீசுக்கு தகவல் தந்துள்ளார்கள்.. கொஞ்ச நேரத்தில் போலீசும் விரைந்து வந்தனர்.. நிர்வாணமாக கோயிலை சுற்றித்திரிந்த பெண்ணை மடக்கி, ஆடையை அணிய செய்தனர்..
புனித கோயிலில் குழப்பம்: பிறகு, கோயிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித தளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டி அவரை, அங்கேயே கைதும் செய்தனர்.. பிறகு விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், அந்த பெண்ணுக்கு மனநிலை சரியில்லை என்ற விஷயமே தெரியவந்தது.. இதனால் அதிர்ந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கவும், அந்த பெண்ணுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருரக்கிறது.
ஆனால், 28 வயதான அந்த பெண்ணுக்கு மனநல பாதிப்பு என்று கோயிலில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.. தன்னுடைய தனது ஆடைகளை களைந்ததுமே, கோவிலில் இருந்த ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளார்.. அங்குமிங்கும் வேக வேகமாக நடந்து அலைந்திருக்கிறார்.. அதற்கு பிறகுதான், போலீசார் வந்து, அந்த பெண்ணை கட்டுப்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்..
ஆடையின்றி திரிந்தார்: அதுமட்டுமல்ல, அவர் அந்த பகுதியில் தங்கியிருந்த ஹோட்டல் ரூம் பில்லைக்கூட கட்டவில்லையாம்.. அவர் தங்கியிருந்த இந்த ஓட்டலிலும் ஆடையின்றி சுற்றித்திரிந்ததாக போலீசார் சொல்கிறார்கள்..
பாலியில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வழக்குகள் சில காலமாக அதிகரித்து வருவதாக இந்தோனேஷியாவின் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது... குறிப்பாக, குடிபோதையில் பிரச்சனையை ஏற்படுத்துதல் அல்லது மத ஸ்தலங்களின் கண்ணியத்தை பாதிக்கும் படி நடந்து கொள்ளுதல் அல்லது ஆபாசத்தைப் பரப்புதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
கடும் அதிர்ச்சி: இந்தோனேஷியா, சுற்றுலா பயணிகளை தவறாக நடத்துவதற்கு கடுமையான விதிகளை அமல்படுத்தி கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது வெளியாகி உள்ளது.. அத்துடன், நிர்வாணமாகவே கோயிலை சுற்றி வந்து கும்பிடும், அந்த பரிதாப பெண்ணின் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications