நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் 'குக்கர்' குண்டுவெடிப்பு.. 20க்கும் மேற்பட்டோர் காயம்
நியூயார்க்: நியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் குப்பைகள் சேகரிப்பு தொட்டியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிக்காத நிலையில் இன்னொரு குக்கர் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுளளது.
முதலில் இது தீவிரவாத செயல் போலத் தெரியவில்லை என்று நியூயார்க் நகர மேயர் கூறியிருந்தார். அதேசமயம், தற்போது குக்கரில் வயர்கள் தெரியும் நிலையில் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது நிச்சயம் தீவிரவாதத் தாக்குதலாகவே இருக்கலாம் என்று தெரிகிறது.
A possible secondary device has been located @ 27th Street, 6th - 7th Avenues. #NYPD nvestigations are ongoing. Avoid the area @NYPD13Pct
— NYPD Special Ops (@NYPDSpecialops) September 18, 2016
மன்ஹாட்டனின் செல்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெடித்தது நம்ம ஊரில் பயன்டுத்துவதைப் போன்ற நாட்டு வெடிகுண்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. செல்சி பகுதியின் 23வது தெருவில் அமெரிக்காஸ் அவென்யூ மற்றும் 7வது அவென்யூ சந்திக்கும் இடத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு குண்டு வெடித்தது. இன்னொரு இடத்தில் வெடிக்காத நிலையில் பிரஷர் குக்கருக்குள் வயர்கள் செருகப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
#Update re: Explosion (photo) pic.twitter.com/AtqllF3JEZ
— NYPDCounterterrorism (@NYPDCT) September 18, 2016
இந்த குண்டுவெடிப்பில் 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் உயிரிழந்ததாக இதுவரை தெரியவில்லை. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு (நம்ம ஊர் நேரப்படி இன்று காலை) இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பத்தைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதையும் போலீஸார் சீல் வைத்துள்ளனர். வெடிகுண்டுகள் ஏதேனும் அங்கு பதுக்க வைக்கப்பட்டிருக்கிறதா என்று தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதுகுறித்து மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில் இது வெளிநாட்டு சக்திகளின் சதியா என்று தெரியவில்லை. ஆனால் உள்ளூரைச் சேர்ந்தவர்களே இதில் தொர்பு கொண்டிருக்கலாம் எந்று சந்திக்கிறோம். தீவிரவாத செயலா என்றும் தெரியவில்லை. விசாரணை நடக்கிறது. விசாரணைக்குப் பின்னரே இதுகுறித்துத் தெரிய வரும் என்றார்.
இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த பலருக்கும் குண்டுச் சிதறலால் ஏற்பட்ட காயம்தான். பெரிய அளவில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரியவில்லை.
இதற்கிடையே வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்ட குக்கர் குண்டு போலத்தான் பாஸ்டன் மாரத்தன் போட்டியின்போது நடத்தப்பட்ட தாக்குதலிலும் பயன்படுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications