நைஜீரியா மார்க்கெட்டில் இரட்டை குண்டுவெடிப்பு: 118 பேர் பலி 30 பேர் படுகாயம்
ஜாஸ்: நைஜீரிய மார்க்கெட்டில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 118 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 30க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தென்னாப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தனி நாடு கோரி தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் அங்கு பள்ளி மாணவிகள் சுமார் 200 பேர் போகோ ஹரம் தீவிரவாதிகள்ஆல் கடத்தப்பட்டனர். மாணவிகளை மீட்கும் பணியை அண்டை நாடுகளின் உதவியோடு நைஜீரியா மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஜாஸ் நகரில் நியூ அபுஜா மார்க்கெட் பகுதியில் வந்த ஒரு டிரக்கில் இருந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், அவசரகால ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, யாரும் எதிர்பார்க்காத நிலையில் அங்கு வந்த மற்றொரு மினிபஸ்சில் இருந்த மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் அவசரகால ஊழியர்களும் பெருமளவில் சிக்கிக்கொண்டனர்.
சுமார் 20 நிமிட இடைவெளியில் நடந்த இந்த இரட்டை குண்டு வெடிப்புகளிலும் சிக்கி 118 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று அந்த மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் பாம் அபுயா தெரிவித்துள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications