Bangladesh Election:வங்கதேசத்தில் இன்று தேர்தல்.. யார் வென்றால் இந்தியாவுக்கு சாதகம்.. 10 பாயிண்ட்டில் எளிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு இன்று நாடாளுமன்ற தேர்தல்(Bangladesh General Election) நடைபெறுகிறது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிஎன்பி மற்றும் ஜேஇஐ கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் யார் வென்றால் இந்தியாவுக்கு சாதகம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா செயல்பட்டு வந்தார். இவர் நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்தார். இவர் 2008 முதல் 2024 வரை பிரதமராக இருந்ததால் இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவு பலமானது.

bnp-vs-jei-whoever-wins-in-bangladesh-general-election-2026-will-favour-india

கடந்த 2024ம் ஆண்டு மத்தியில் வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையை தொடர்ந்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

நாடாளுமன்ற தேர்தல்

இதையடுத்து இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் வங்கதேசத்தில் நிர்வாகம் நடந்து வந்தது. இருப்பினும் தொடர்ந்து அங்கு வன்முறை அரங்கேறியது. இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்தது. அதனை முகமது யூனுஸ் தடுக்கவில்லை.

ஏனென்றால் அவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இந்நிலையில் தான் இன்று வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவாகும்போது முகமது யூனுஸின் இடைக்கால அரசு முடிவுக்கு வருகிறது.

எத்தனை தொகுதிகள்?

இதனால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேச மக்கள் மட்டுமின்றி இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் இந்த தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தல் வெற்றி பெறும் கட்சியை பொறுத்து தான் இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் வங்கதேசத்துடன் இருக்கும் உறவு நிர்ணயம் செய்யப்படும்.

அந்த வகையில் எந்த கட்சி வென்றால் இந்தியாவுக்கு சாதகம் என்பது பற்றியும், வங்கதேச தேர்தல் நடைமுறை பற்றியும் இங்கே பார்க்கலாம்.

* வங்கதேசத்தில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் தற்போது ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் 299 தொகுதிகளுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

ரிசல்ட் எப்போது?

* வங்கதேசத்தில் ஓட்டு சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4.30 மணி வரை நடைபெறும். அதன்பிறகு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். ஓட்டு சீட்டு முறை என்பதால் வாக்குகள் எண்ணி முடிக்க டைம் எடுக்கும். இதனால் நாளை தான் முழு ரிசல்ட் வெளியாகும்.

* வங்கதேசத்தில் மொத்தம் 43,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 12.77 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று ஓட்டளிக்க உள்ளனர்.

* இன்று நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 84 அம்ச சீர்திருத்த முன்மொழிவு குறித்த பொது வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதனால் இந்த தேர்தல் கூடுதல் கவனம் பெற உள்ளது.

எந்தெந்த கட்சிகள் போட்டி

* வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரடி போட்டி என்பது மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) மற்றும் ஷபிஹூர் ரஹ்மானின் ஜேஇஐ எனும் ஜமாத்-இ-இஸ்லாமி இடையே இருக்கிறது.

* பல கருத்து கணிப்புகள் தாரிக் ரஹ்மானின் என்சிபி கட்சிக்கு சாதகமாக வந்துள்ளன. இருப்பினும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியுடனான வேறுபாடு என்பது குறைவாக தான் உள்ளது. இதனால் யார் வெல்வார்கள்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் ஹசீனா ஆட்சியை கவிழ்த்த மாணவர்கள் தொடங்கிய என்சிபி (National Citizen party)கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பதை கருத்து கணிப்புகள் உறுதி செய்துள்ளன.

இந்தியாவுக்கு சாதகம் யார்?

* சமீபத்தில், முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். இதனால் பிஎன்பி கட்சியை தற்போது கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வழிநடத்தி வருகிறார். இவரது கட்சி கடந்த காலங்களில் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தது. ஆனால் தற்போது நம் நாட்டுடன் பிஎன்பி கட்சிக்கு நல்ல உறவு உள்ளது.

* கலிதா ஜியா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததற்கு தாரிக் ரஹ்மான் நன்றி தெரிவித்தார். அதேபோல் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வங்கதேசம் சென்று கலிதா ஜியாவின் இறுதி சடங்கில் பங்கேற்றார். இது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஷேக் ஹசீனா அளவுக்கு இந்தியாவுடன் நல்லுறவு ஏற்படுமா? என்பது கேள்விக்குறித்தான்.

* அதேவேளையில் ஷபிஹூர் ரஹ்மானின் ஜமாத் இ-இஸ்லாமி கட்சி நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டது. மதஅடிப்படைவாதத்துடன் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜமாத் இ - இஸ்லாமி வென்றால் நம் நாட்டுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.

* மேலும் இந்த தேர்தலில் இஸ்லாமிய ஜமாத்கள் ஷபிஹூர் ரஹ்மானின் பிஎன்பி கட்சிகள் பக்கம் நிற்பது அந்த கட்சிக்கு பலமாக உள்ளது. அதேவேளையில் ஹசீனாவின் அவாமி லீக் ஆதரவாளர்கள் மற்றும் கலிதா ஜியாவின் மறைவால் ஏற்பட்ட அனுதாபம் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கட்சிக்கு உள்ளது. இதனால் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. இது தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+