நைஜீரியா: போகோ ஹரம் தீவிரவாதிகள் தாக்கியதில் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி
டமாடுரு: நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினரின் முகாம் மீது போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 31 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர். சமீபத்தில் 300 மாணவிகளைக் கடத்திய தீவிரவாதிகள் அவர்களை பாலியல் அடிமைகளாக விற்கப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
அம்மாணவிகளை மீட்கும் முயற்சியில் நைஜீரிய அரசு அண்டை நாடுகளின் உதவியோடு ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே நைஜீரியாவின் பல பகுதிகளில் போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை ஆயிரக்கணக்காணோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று நைஜீரியாவின் வட கிழக்கு நகரமான புனியாடியில் உள்ள பாதுகாப்பு படையினரின் முகாம் மீது போகோஹாரம் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அங்கிருந்த பாதுகாப்பு படையினர் 31 பேர் பலியானார்கள்.
தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் கவச வாகனத்திலும், ஹைலக்ஸ் டிரக்குகளிலும் வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகள் சமீபகாலமாக ராணுவத்தையும் தாக்கி வருகின்றனர்.
தற்போது தாக்குதல் நடந்த இந்த இடத்திற்கு அருகில் தான் கடந்த பிப்ரவரி மாதம் பொதுமக்கள் 59 பேரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications