போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் மிருகத்தனம்.. கும்பல் கும்பலாக பெண்கள் பலாத்காரம்!

Subscribe to Oneindia Tamil

டலோரி, நைஜீரியா: நைஜீரியாவை ஆட்டிப்படைத்து வரும் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களிடம் பிடிபட்டுள்ள பெண்களை மொத்தமாக பாலியல் பலாத்காரம் செய்து அட்டகாசம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களில் பலர் சிறுமிகள் என்று கூறப்படுகிறது. இவர்களை அடுத்தடுத்து பலமுறை இந்த தீவிரவாத வெறியர்கள் பலாத்காரம் செய்து வருகின்றனர். இவர்கள் மூலம் குழந்தை பெற்று, அவர்களை தங்களது இயக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இந்த அட்டகாச செயலில் அவர்கள் ஈடுபட்டுள்ளனராம்.

Boko Haram militants rape the women and girls in Nigeria en masse

இவர்களை கும்பல் கும்பலாக அறைகளில் அடைத்து வைத்துள்ள தீவிரவாதிகள் அடுத்தடுத்து பலாத்காரம் செய்து வருவதாக அங்கிருந்து தப்பி மீண்டு வந்த பெண்கள் கூறியுள்ளனர். இவர்களை செக்ஸுக்காக மட்டுமே அடைத்து வைத்துள்ளனராம் தீவிரவாதிகள்.

இதுகுறித்து 25 வயதான ஹமாட்சு என்ற பெண் கூறுகையில், என்னை அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். நான் தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளேன். இந்தக் குழந்தைக்குக் காரணம் அந்த இயக்கத்தின் தீவிரவாதிகளில் யாரோ ஒருவர்தான். பலரால் நான் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

யாரும் அவர்களை எதிர்த்துப் பேச முடியாது. பேசினால் சத்தம் போட்டால் சுட்டுக் கொன்று விடுவார்கள். என்னை பலர் பலாத்காரம் செய்த நிலையில் ஒருவரை அழைத்து அவரை எனக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

கிராமங்களைச் சேர்ந்த பல பெண்கள், சிறுமிகளை அவர்கள் சிறை வைத்துள்ளனர். கிராமப்புற அடையாளம் மாறி விடக் கூடாது என்பதற்காக எங்களை கர்ப்பமாக்கி குழந்தை பேறை ஏற்படுத்துகின்றனர். எப்போது வேண்டுமானாலும் வந்து செக்ஸ் வைத்துக் கொள்வார்கள். இரவு, பகல் என்று கணக்கே கிடையாது என்றார் அவர்.

ஏற்கனவே போகோ ஹரம் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகளில் 200க்கும் மேற்பட்டோர் கர்ப்பமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர்களை எப்படியெல்லாம் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்தனர் தீவிரவாதிகள் என்பது தெரிய வந்து உலகை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+