லிபியாவில் மூடப்பட்ட எகிப்து, அமீரக தூதரங்களுக்கு வெளியே குண்டுவெடிப்பு: 5 பேர் காயம்
திரிபோலி: லிபியாவில் மூடப்பட்ட எகிப்து மற்றும் அமீரக தூதரகங்களுக்கு வெளியே குண்டுகள் வெடித்ததில் 5 காவலாளிகள் காயம் அடைந்தனர்.
லிபியா தலைநகர் திரிபோலியில் இருக்கும் எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. முஸ்லீம் போராளிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் திரிபோலி நகரை கைப்பற்றினர். அவர்கள் திரிபோலியை கைப்பற்றியபோது அமீரக போர்விமானங்கள் எகிப்தில் இருந்து போராளிகள் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில் வியாழக்கிழமை எகிப்து தூதரக கட்டிடத்திற்கு அருகே உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் குண்டு வெடித்தது. இதில் தூதரக கட்டிடத்தின் ஜன்னல்கள் சிதறின. மேலும் தூதரகத்திற்கு வெளியே இருந்த 2 காவலாளிகள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வெளியே ஒரு குண்டு வெடித்தது. இதில் 3 காவலாளிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அமீரகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு குண்டுகளும் கார்களில் வைக்கப்பட்டிருந்தன. திரிபோலியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இந்த குண்டுவெடிப்புகள் நிரூபிக்கின்றன என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போராளிகள் தொடர்ந்து திரிபோலியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நிலைமை மோசமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
போராளிகள் திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றுவதை தடுக்க அமீரகம் எகிப்து விமான தளத்தில் இருந்து தாக்குதல் நடத்தியதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. திரிபோலியில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததால் எகிப்து கடந்த ஜனவரியிலும், அமீரகம் மே மாதத்திலும் தங்களின் தூதரகங்களை மூடின.
முன்னாள் அதிபர் கடாஃபியின் பதவி பறிக்கப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்ட பிறகு லிபியாவில் போராளிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications