தாய் மீது மோதிய கார்.. கோபம் கொண்டு காரை உதைத்த சிறுவன் .. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை கோபம் கொண்ட சிறுவன் காலால் எட்டி உதைத்து ஆவேசமாக திட்டி தனது கோபத்தை காட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது சிறுவனை கையில் பிடித்தவாறு சாலையை கடக்க முயன்றார்.

Boy in China goes anger after car hits his mother

அப்போது அவ்வழியாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறிய பெண் தனது மகனுடன் கீழே விழுந்தார். தனது தாய்க்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு கோபம் கொண்ட சிறுவன் அந்த காரை இரு முறை எட்டி உதைத்தார்.

பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த அவரிடம் சிறுவன் ஆவேசமாக கத்தினான். பின்னர் மீண்டும் தாய்க்கு ஏதேனும் ஆகிவிட்டதா என அழுது கொண்டே பார்க்கிறான்.

இதையடுத்து அந்த பெண்ணையும் சிறுவனையும் அந்த நபர் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். இந்த வீடியோ மூலம் சிறுவன் தனது தாய் மீது வைத்துள்ள பாசம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+