For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரேசிலில்.. கர்ப்பிணிகளுக்கு 'அஸ்ட்ரா ஜெனகா' தடுப்பூசி செலுத்த தடை.. எதுக்கு தெரியுமா?

Google Oneindia Tamil News

பிரேசிலியா: பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு.. மத்திய அரசே முழுமையான காரணம்.. புட்டு, புட்டு வைக்கும் தரவுகள்! தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு.. மத்திய அரசே முழுமையான காரணம்.. புட்டு, புட்டு வைக்கும் தரவுகள்!

பிரேசிலை படுத்தும் கொரோனா

பிரேசிலை படுத்தும் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் 72,715 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒரே நாளில் 2,300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பிரேசிலில் கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கர்ப்பிணி உயிரிழப்பு

கர்ப்பிணி உயிரிழப்பு

அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரேசிலை சேர்ந்த 35 வயது கர்ப்பிணி ஒருவர் வலிப்பு நோய் காரணமாக கடந்த 10-ம் தேதி உயிரிழநதார். அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பெற்றுக் கொண்ட பிறகே அவரது உயிர் நிகழ்ந்துள்ளது.

தடுப்பூசி காரணம்

தடுப்பூசி காரணம்

அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியால் எற்பட்ட பக்க விளைவே கர்ப்பிணியின் இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் நாட்டில் வேறு எந்த கர்ப்பிணிகளுக்கும் இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படவில்லை.

அஸ்ட்ரா ஜெனகாவுக்கு இடைக்கால தடை

அஸ்ட்ரா ஜெனகாவுக்கு இடைக்கால தடை

இந்த நிலையில் பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பக்க விளைவுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும், மற்ற தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

English summary
Brazil has imposed an interim ban on the use of the AstraZeneca vaccine for pregnant women
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X