பிரேசில் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் ... ஒரே நாளில் 2,042 பேர் மரணம்
பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. ஒரே நாளில் 72,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,042 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 72,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் மொத்த எண்ணிக்கை 18,243,483 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து ஒரே நாளில் 2,042 பேர் மரணமடைந்துள்ளனர். உலகத்திலேயே அதிக அளவிலான மரணங்கள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது.
பிரேசிலில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 28,066 பேர் குணமாகியுள்ளனர். கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,511,701 பேராக அதிகரிப்பு

நாடு மருத்துவமனைகளில் 12,22,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்து ஒரே நாளில் 2,042 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,09,282 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பிரேசிலில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆரம்பத்திலேயே தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறியதாக அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 12,580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,44,64,171 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 21,238 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மொத்தம் 2,88,70,962 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 326 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 6,18,649 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து அமெரிக்க மருத்துவமனைகளில் 4,974,560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவில் மாடர்னா, பைசர் பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் அன் ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அங்கு இதுவரை மொத்தம் 32,06,87,205 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications