பிரபல நாட்டுப்புற பாடகி விமான விபத்தில் திடீர் மரணம்.. அருவி பாறையில் நொறுங்கி மோதி உயிரிழப்பு
பிரேசிலின் பிரபல நாட்டுப்புறப்பாடகி விமான விபத்தில் உயிரிழந்தார்
பிரஸ்ஸிலா: பிரபல நாட்டுப்புற பாடகி மரிலியா மென்டோன்கா விமான விபத்தில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 26 வயதான இந்த இளம்பாடகி லத்தீன் கிராம விருது பெற்றவர் ஆவார்.
பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரெய்ஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. பிரேசிலின் புகழ்பெற்ற அந்த இளம்பாடகிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஆக்ரோஷம், காதல், துள்ளல் என அனைத்து ரக பாடல்களையும் பாடி மக்களின் மனங்களை வென்றவர்.. இவருக்கு வயது 26 ஆகிறது..

பட்டப்பெயர்
இவரது சோக பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.. அதற்காகவே "துன்பங்களின் ராணி" என்று இவருக்கு பட்டப்பெயர் ஒன்றும் உள்ளது.. அதேபோல பிரேசில் நாட்டில், நாட்டுப்புற இசை மிகவும் புகழ்பெற்றது.. அத்தகைய பாடல்களையும் சிறப்பாக இவர் பாடுவார்.. கிராமிய இசைக்கென அடையாளமாகவே திகழ்ந்தார்..

பைலட்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காரட்டிங்கா அருகிலுள்ள ஒரு கிராமத்தில்தான் நடக்கவிருந்த நிகழ்ச்சிக்காக சிறிய ரக விமானத்தில் சென்றுள்ளார்.. அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவருடன் உதவியாளர், தயாரிப்பாளர், மற்றும் பைலட், துணை பைலட் என மொத்தம் 5 பேர் சென்றுள்ளனர்.. விபத்து ஏற்பட்டு ஒரு அருவியில் உள்ள பாறைப்பகுதியில் மோதி அந்த விமானம் நொறுங்கி விழுந்துள்ளது.. 5 பேருமே உயிரிழந்துவிட்டனர்..

கண்ணீர் அஞ்சலி
அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. இதை எங்களால் நம்பவே முடியவில்லை.. பொய்யாக இந்த செய்தி இருக்கக்கூடாதா என்று அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர். தனிப்பாடல் தொகுப்புக்காக 2019-ல் லத்தீன் கிராமி அவார்டும் பெற்றவர்.

புகழாரம்
இவருக்கு யூடியூப்பில் மட்டும் 7.8 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் உண்டு... அத்தனை பேரும் இந்த மரண செய்தியை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ இதை பற்றி சொல்லும்போது, "தலைமுறையின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவரான இளம் நாட்டுப் பாடகி மரிலியா மென்டோன்சாவின் மரண செய்தியை முழு நாடும் அதிர்ச்சியில் உள்ளது.. தனது தனித்துவமான குரல், கவர்ச்சி மற்றும் இசையால் நம் அனைவரின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்" என்று புகழாரம் சூட்டி உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications