தரம் குறைந்த செயற்கை மார்பகத் தயாரிப்பு: நிறுவன உரிமையாளருக்கு 4 ஆண்டு சிறை
பாரிஸ்: பிரான்சில் செயற்கை மார்பக தயாரிப்பில் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது.
பெண்கள் தங்களது முன்னழகை அதிகக் கவர்ச்சியாக்குவதற்கும், நோயினால் பாதிக்கப் பட்டு மார்பகங்களை இழந்தவர்களும் ஆபரேஷன் மூலம் செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொள்வதுண்டு.
அந்தவகையில், செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொண்ட பெண்கள், தரம் குறைந்த பொருட்களால் செயற்கை மார்பகம் தயாரிக்கப் பட்டுள்ளதாக அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்ட பிரான்ஸ் நாட்டு செயற்கை மார்பக தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அழகு இந்நிறுவனத் தயாரிப்பு....
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த அழகுசாதன நிறுவனம் ஒன்று தயாரித்து விற்பனை செய்த செயற்கை மார்பகங்களை சுமார் 65 நாடுகளைச் சேர்ந்த 3,00,000 பெண்கள் உபயோகப் படுத்தியுள்ளனர்.

தரம் குறைந்த செயற்கை மார்பகங்கள்....
இதில் பயன்படுத்தப்பட்ட சிலிகான் ஜெல் என்ற மூலப்பொருளின் தரம் குறைவாக இருந்ததினால் இத்தகைய செயற்கை மார்பகங்கள் விரைவிலேயே கிழியத் தொடங்கியதாக சம்பந்தப் பட்ட பெண்கள் புகார் அளிக்கத் தொடங்கினர்.

புகார் மனு....
மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டில் செயற்கை மார்பக சிகிச்சையின் தோல்வியால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்த பயம் பெண்களிடையே அதிகரிக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சுமார். 5,000 க்கும் மேற்பட்ட பெண்கள் இது குறித்து பிரான்சில் புகார் மனு அளித்தனர்.

தரமற்ற சிலிக்கான்....
சம்பந்தப்பட்ட பெண்களின் புகார் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் தரமற்ற சிலிக்கானைப் பயன் படுத்தி செயற்கை மார்பகம் தயாரித்ததாக அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் நான்கு பேரைக் கைது செய்தது.

4 வருட சிறைத் தண்டனை...
வழக்கு விசாரணையின் முடிவில், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜீன் கிளாட் மாசுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும், 75,000 யூரோக்கள் அபராதத் தொகையையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது மார்செயில் நீதிமன்றம்.

மாற்று அறுவைச் சிகிச்சை....
மேலும், பிரிட்டனைச் சேர்ந்த 47,000 பெண்கள் இந்த சிகிச்சையை மேற்கொண்டதாகவும், அவர்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கத் தேவையில்லை என்றபோதும், பாதிக்கப்பட்ட பெண்களின் நிம்மதிக்காக மாற்று அறுவை சிகிச்சையை அளிக்கவும் பிரிட்டிஷ் சுகாதார அதிகாரிகள் சம்மதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications