அமெரிக்க டாலருக்கு முடிவுரை எழுதிய BRICS.. வர்த்தகத்தில் படு ஜோரான முன்னேற்றம்! இதை கவனிச்சீங்களா?
மாஸ்கோ: இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் $1 டிரில்லியனை கடந்திருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வில் புதின் இதனை தெரிவித்திருக்கிறார். இது டாலருக்கு எதிரான முதற்கட்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் தற்போது 10க்கும் அதிகமான நாடுகள் இருக்கின்றன. இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை, உலக மக்கள் தொகையில் 40% ஆகும். அதேபோல உலக ஜிடிபியில் இது சுமார் 40% அளவுக்கு பங்களிப்பை செலுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த நாடுகள் தங்களுக்கு இடையில், சுமார் $1 டிரில்லியன் அளவுக்கு வர்த்தகம் செய்திருப்பதாக புதின் கூறியுள்ளார். மேலும், "BRICS நாடுகள், மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பெரிய திட்டங்களைத் தொடங்குகின்றன. அணுசக்தி, விமான போக்குவரத்து, புதிய பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் பெரிய திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.
BRICS நாடுகளுக்குள் உறவுகளை வலுப்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஒற்றுமை, சமத்துவம் மற்றும் ஒருவருக்கொருவர் நலன்களை மதிப்பது ஆகியவற்றை நாங்கள் பின்பற்றி வருகிறோம். பிரிக்ஸில் சேர விரும்புவோருக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்" என்று புடின் கூறினார்.
புதினின் இந்த பேச்சு அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு இடையில், தங்களது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்கிறது. உலக அளவில் கொடுக்கல் வாங்கல் எல்லாம் அமெரிக்க டாலரில்தான் நடைபெறுகிறது. ஆனால் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் வர்ததகம் செய்கின்றன. உதாரணமாக நாம் ரஷ்யாவிலிருந்து பெட்ரோல் வாங்குகிறோம் எனில், அதற்காக அமெரிக்க டாலலை கொடுப்பதில்லை. மாறாக இந்திய ரூபாயைதான் கொடுக்கிறோம்.
இப்படி சொந்த கரன்சி வர்த்தகத்தால் டாலர் மதிப்பு குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டாலர் ஆதிக்கம் குறைந்தால், அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்ற நாடுகளைப் பாதிக்கும் விதம் குறையும்.
அதாவது இந்தியா இனி அமெரிக்கா டாலரை நம்பியிருக்க தேவையில்லை. அந்நிய செலாவணி கையிருப்பு குறித்தும் இனி நாம் பயப்பட வேண்டியதில்லை. சர்வதேச வர்த்தகம் பெரும்பாலும் டாலரில் நடப்பதால், டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் அடையும்போது இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. டாலர் வலுவடைந்தால், இறக்குமதி செய்யும் செலவு அதிகமாகும், இதனால் உள்நாட்டுப் பணவீக்கம் அதிகரிக்கும். ஆனால் பிரிக்ஸ் நாடுகளில் நாம், நமது சொந்த கரன்சியில்தான் வர்த்தகம் செய்கிறோம். எனவே டாலரின் மதிப்பு குறைந்தாலும் நமக்கு கவலையில்லை.
அதேபோல தற்போது, ஒரு இந்திய நிறுவனம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்போது, ரூபாயை டாலராகவும், பிறகு டாலரை ரூபிளாகவும் மாற்ற வேண்டும். இந்த செயல்முறைக்கு வங்கி கட்டணங்கள் அதிகம். உள்ளூர் கரன்சியில் நேரடியாக வர்த்தகம் செய்யும்போது, இந்த கூடுதல் செலவுகளைத் தவிர்க்கலாம். இதனால் வர்த்தகச் செலவுகள் குறைந்து, லாபம் அதிகரிக்கும்.
மேலும், சர்வதேச வர்த்தகத்தில் ரூபாய் அதிகம் பயன்படுத்தப்பட்டால், உலக அளவில் ரூபாய்க்கான தேவை அதிகரிக்கும். தேவை அதிகரித்தால், அதன் மதிப்பும் உயரும். இது ரூபாயை ஒரு சக்திவாய்ந்த உலக நாணயமாக மாற்ற உதவும். ரூபாயின் மதிப்பு உயரும்போது, இந்தியாவுக்கு இறக்குமதிக்கான செலவு குறையும்.
ஆக சுற்றி வளைத்து பார்த்தால், பிரிக்ஸ் வர்த்தகம் நமக்கு நன்மையைதான் ஏற்படுத்தியுள்ளது. உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பதான் BRICS நாடுகளின் நீண்டகால இலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications