அடக்கடவுளே! ரிப்பன் கட் செய்த மறுநொடி! அப்படியே சரிந்து விழுந்த புதிய பாலம்! அழுது புலம்பும் மக்கள்
கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலம் திறக்கப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் அரசுத் துறைகளில் எந்தளவுக்கு ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதாரண தண்ணீர் பம்பு செட் திட்டத்திற்குப் பல லட்சம் மதிப்பீடுகளை எழுதுவார்கள்.
அவ்வளவு செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களும் கூட போதிய தரத்துடன் இருப்பதில்லை. சில ஆண்டுகளிலேயே அவர் உடைந்து விழும் அளவுக்கு மோசமான நிலையிலேயே கட்டப்படுகிறது.

ஊழல்
சமீபத்தில் கூட இப்படித்தான் உத்தரப் பிரதேசத்தில் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை திறக்கப்பட்டு, 5ஆம் நாளிலேயே அது அப்படியே சேதம் அடைந்தது. இருப்பினும், இந்தியாவுக்குப் போட்டி தரும் அளவுக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடினாலும் கூட, ஊழல் அங்குக் குறைந்ததாகத் தெரியவில்லை. இதனால் தான் வளங்கள் கொட்டிக் கிடந்தும் கூட ஆப்பிரிக்க நாடுகளால் வளர்ச்சி அடைய முடியவில்லை.

ஆப்பிரிக்கா
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஊழல் எந்தளவு உள்ளது என்பதைக் காட்டும் வகையிலான சம்பவம் ஒன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் நடந்துள்ளது. அங்கு ஒரு பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காகப் புதிதாகப் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்த பாலத்தை அங்குள்ள அரசியல்வாதிகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். அவர்கள் திறந்து வைத்த மறுநொடியே அந்த பாலம் அப்படியே சரிந்து விழுந்தது.

விழுந்தது
ரிப்பன் கட் செய்துவிட்டு, அதிகாரிகள் அங்கிருந்து நகரக் கூட இல்லை. அதற்குள்ள அந்தப் பாலம் அப்படியே இடிந்து விழுந்தது. பாலத்தில் இருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் ரொம்பவே கஷ்டப்பட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர். நல்வாய்ப்பாக அவர்களில் யாருக்கும் மோசமான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

புதிய பாலம்
உள்ளூர் மக்கள் அங்குள்ள ஆற்றைக் கடக்க உதவும் வகையிலேயே இந்த பாலம் கட்டப்பட்டது. முன்னதாக இதே இடத்தில் தற்காலிக பாலம் இருந்தது. ஆனால், அதுவும் அவ்வப்போது இடிந்து விழுந்தது. இதனால் புதிய பாலத்தைக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் அந்தப் புதிய பாலம் கட்டப்பட்டது. இருப்பினும், பாலம் திறக்கப்பட்ட மறுநொடியே அது அப்படியே சரிந்து விழுந்தது. இதற்குப் பழைய பாலமே மேல் எனப் புலம்பி வருகின்றனர். அப்பகுதி மக்கள்.

டிரெண்ட்
இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. சுமார் 10 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், அரசு அதிகாரிகள் அந்த பாலத்திற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைக்கின்றனர். இருப்பினும், இது நடந்த மறுநொடியே அந்தப் பாலம் அப்படி சரிந்து விழுகிறது. அருகே இருந்தவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்தவர்களைக் காப்பாற்றுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவில் எந்தளவுக்கு ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அரசின் நிதி மக்கள் நலத்திட்டங்களுக்கு முறையாகச் செலவிடப்படுவதில்லை என்றும் மாறாக ஒரு சிலரின் பாக்கெட்களுக்கு அவை செல்வதாகவும் நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications