லண்டன் தீவிரவாத தாக்குதல்.. பிரதமர் தெரசா பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டார்!
பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாதுகாப்பாக உள்ளார் என அந்நாட்டு பாதுகாப்ப அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன்: பிரிட்டன் பிரதமர் தெரசா மே பாதுகாப்பாக உள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்துக்குள் உள்ள 400 எம்பிக்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தின் வெளியே மர்மர நபர்கள் இன்று திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் போலீசாரால் சுடப்பட்டுள்ளார் என்று இங்கிலாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாடாளுமன்றத்தில் இருந்த பிரிட்டன் பிரதமர் தெராசா மே பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் நாடாளுமன்றத்தின் உள்ளே உள்ள சுமார் 400 எம்பிக்களும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெஸ்ட் மினிஸ்டர் பேலஸை சுற்றியுள்ள பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தீவிரவாதிகள் பதுங்கியுள்ளனரா என ஹெலிக்காப்டர் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications