விமான சேவை கடும் பாதிப்பு.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் திடீரென 48 மணி நேரம் ஸ்டிரைக்
லண்டன்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானிகள் ஊதிய பிரச்சனையால் திடீரென 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொடங்கியுள்ளனர். இதனால் விமான சேவைகள் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான முன்னறிவிப்பை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் கொடுக்காததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் தினசரி பல்லாயிரம் பணிகளுக்கு உலகம் முழுவதும் விமான சேவை அளித்து வருகிறது.
இந்த விமானங்களை இயங்கும் பயணிகளுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் ஊதியம் பிடிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது.

வேலை நிறுத்தம்
இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கம் , பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.ஆனால் விமானிகள் சங்கத்தின் கோரிக்கைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் செவிசாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் விமானிகள் சங்கம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தது. இதன்படி 48 மணி நேர வேலைநிறுத்தத்தை பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானிகள் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக இன்றும் நாளையும் ஏராளமான விமான சேவைகள் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னறிவிப்பு இல்லை
விமானிகளின் இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக பயணிகளுக்கு சரியான முன்னறிவிப்பை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக பல்லாயிரம் பயணிகள் பயண திட்டங்களை மாற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இதன் காரணமாக பலரும் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை வசை பாடிவருகிறார்கள்.

எங்களுக்கு வேறுவழியில்லை
இந்நிலையில் விமானிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், ‘இது விமானிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை' என விமர்சித்துள்ளது. விமானிகள் சங்கமோ தங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்ததால் வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி மறுபடியும் வேலை நிறுத்தப் போராட்டத்தை பிரிட்டிஸ் ஏர்வேஸ் விமானிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இழப்பீடு வழங்க வேண்டும்
இதனிடையே விமானம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக பயணிகளுக்கு டிக்கெட் இழப்பீடு, புதிய பயண ஏற்பாடுகள், போன்றவைற்றை பயணிகளுக்கு அளிக்க வேண்டிய நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் உள்ளது. இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு இந்த இரண்டு நாளில் சுமார் 1051 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications