80 வயது சீக்கியரை தாக்கிய 20 வயது இங்கிலாந்து பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை
லண்டன்: இங்கிலாந்தில் 80 வயது சீக்கியரை தாக்கிய இளம்பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் மேற்கு மிட்லேண்ட்ஸில் உள்ள கவென்ட்ரி நகரைச் சேர்ந்தவர் ஜோகிந்தர் சிங்(80). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் சிட்டி சென்டர் என்ற இடத்திற்கு சென்றபோது கோரல் மில்லர்சிப்(20) என்ற பெண் அவரை தாக்கினார். கோரல் சிங்கை கையால் குத்தியதில் அவர் தரையில் விழுந்தார். அவர் தலைப்பாகையும் கீழே விழுந்தது.
இந்த தாக்குதலில் சிங்கிற்கு மூக்கில் அடிபட்டது. உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வந்த சிங் இந்த தாக்குதல் நடந்த 3 மாதத்திற்கு பிறகு இறந்துவிட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கோரலை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த வார்விக் கிரவுன் நீதிமன்றம் கோரலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஒரு வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் வங்கி கார்டுகளை திருடியதற்காக கோரலுக்கு 20 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications