ஸ்கை டைவ்... வெளியே குதிக்க தயாரானபோது விமானம் விபத்தில் சிக்கி இந்தியப் பெண் பலி!
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வந்த இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் ஸ்கை டைவின்போது விமானத்திலிருந்து கீழே குதிக்கத் தயாரானபோது அந்த விமானம் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்தப் பெண்ணின் பெயர் வர்ஷா மைசூரியா. 42 வயதான இவர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அங்குள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக மெக்சிகோவுக்கு சென்றிருந்தார். அங்கு சந்தோஷமாக குடும்பத்துடன் விடுமுறையைக் கழித்து வந்த அவர் ஸ்கைடைவிங்கில் ஈடுபட்டார். அதுதான் அவரது கடைசி சந்தோஷமாக போய் விட்டது.

சம்பவத்தன்று ஸ்கை டைவில் ஈடுபட அவர் விமானத்தில் ஆயத்தமாக இருந்தார். அது ஒரு செஸ்னா 180 விமானமாகும். பைலட்டுடன், மைசூரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் ராபின் பெலச்னி ஆகியோர் இருந்தனர்.
எல்லாம் தயாராகி வர்ஷா விமானத்திலிருந்து கீழே குதிக்கத் தயாரானபோது திடீரென விமானம் விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்து விட்டது. இதில் வர்ஷா, பயிற்சியாளர் மற்றும் விமானி ஆகியோர் பரிதாபமாக கடலுக்குள் மூழ்கி விட்டனர்.
இவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஆனால் யாரும் இதுவரை கிடைக்கவில்லை. விபத்தில் சிக்கி மூன்று பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை கடலில் விழுந்த அந்தக் குட்டி விமானமும் மீட்கப்படவில்லை. இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர் இங்கிலாந்தில் பெரும் கவலையுடன் காத்துள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications