இளவரசி டயானா மரணம் கொலையல்ல... விபத்து தான்: பிரிட்டன் போலீசார் திட்டவட்டம்
லண்டன்: இளவரசி டயானா மரணம் விபத்தல்ல, கொலை என எழுந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளனர் பிரிட்டன் போலீசார்.
கடந்த 1997ம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி டயானா உயிரிழந்தார். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படு கொலை என சர்ச்சை எழுந்தது. இதில் பிரிட்டன் சிறப்பு விமானப் படையினருக்கு தொடர்பு உண்டு என்றும் கூறப்பட்டது. அப்படையில் பணியாற்றிய வீரர் ஒருவரின் மனைவி இதற்கான ஆதாரத்தை ஸ்காட்லாந்து யார்டு போலீஸாரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்தார்.
அந்த ஆதாரங்களை ஆய்வு செய்த போலீஸார், அவை வலுவானதாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் இல்லை என்று கூறி டயானா கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதனர்.

இளவரசி டயானா....
இங்கிலாந்து இளவரசர் சார்லசை காதல் திருமணம் செய்து கொண்டவர் டயானா. இவர்களுக்கு வில்லியம், ஹரி என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சார்லசுடன் வாழ்ந்த போதே தான் வேறொருவரைக் காதலிப்பதாக அறிவித்தார் டயானா.

விவாகரத்து செய்ய ....
இங்கிலாந்து ராஜ குடும்பத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த அறிவிப்பால், டயானாவை விவாகரத்து செய்து விடும்படி சார்லசை ராணி எலிசபெத் வற்புறுத்தினார்.

விபத்தில் பலி....
இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு ஆண்ட காதலர் டோடி ஃபயீத்துடன் பாரீஸ் நகரில் காரில் சென்ற போது தங்களை புகைப்படம் எடுக்க துரத்தி வந்த பத்திரிகையாளர்களிடம் இருந்து தப்பிக்க காரை வேகமாக ஓட்டும்படி டிரைவருக்கு டயானா உத்தரவிட்டார். சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா - டோடி ஃபயீத் இருவருமே விபத்தில் சிக்கி பலியாகினர்.

ரகசிய ஏற்பாடு....
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என குற்றம் சாட்டினார்.

புதிய புத்தகம்....
அதனைத் தொடர்ந்து அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மருத்துவக் குறிப்பேடு...
அதில், விபத்தில் சிக்கிய டயானாவை பாரீசில் உள்ள பிட்டி - சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது அவரது வயிற்றை 'எக்ஸ்-ரே' எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 - 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

கௌரவக்கொலை....
மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே எம்-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கௌரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மூடி மறைக்கப்பட்ட ரகசியம்....
கர்ப்பமாக இருந்த டயானாவின் வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டதாகவும் அலன் பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுருந்தார்.

அதிர்ச்சித் தகவல்கள்...
அதனைத் தொடர்ந்து, டயானாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர், திட்டமிட்டே கொலை செய்யப்பட்டதாகவும், அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இதில், பிரிட்டன் ராணுவ அதிகாரி ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டது.

விசாரணை முடிந்தது....
இதையடுத்து, பிரிட்டன் போலீசார், இந்த வழக்கை விசாரித்து வந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பின், டயானாவின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாக, போலீசார் நேற்று முந்தினம் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மரணம் உறுதி...
இதுகுறித்து, பிரிட்டன் போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது, ‘டயானாவின் மரணம் குறித்த விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. அவர், கொலை செய்யப்பட்டதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை. அவர், கார் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விசாரணை அறிக்கை, விரைவில் வெளியிடப்படும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications