Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் ஒரு பெண்... முழுமையான பெண்.. கிம் கர்தஷியானின் தந்தை கிளப்பும் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகிலேயே மிகச் சிறந்த தடகள வீரராக ஒரு காலத்தில் திகழ்ந்தவர் ப்ரூஸ் ஜென்னர். ஒலிம்பிக்கில் பதக்கமும் வென்றவர். பின்னர் ரியாலிட்டி டிவி ஸ்டாராக மாறினார். இப்போதோ பெண்ணாக மாறி விட்டார். அமெரிக்காவின் பிரபலமான திருநங்கையாக வலம் வரும் இவருக்கோ 3 மனைவியர் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் ஒரு பெண் என்று ஏபிசி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் பகிரங்கமாக கூறியுள்ளார் ஜென்னர். மக்கள் என்னை கட்டழகு மிக்க ஆணாக பார்க்கிறார்கள். ஆனால் இதயப்பூர்வமாக நான் ஒரு பெண் என்பதை இன்று அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார் 65 வயதான ஜென்னர்.

உடல் ரீதியாக, மன ரீதியாக, இதயப்பூர்வமாக எனக்குள் ஒரு பெண் இருக்கிறாள். அவள்தான் உண்மையானவள் என்றும் கூறுகிறார் ஜென்னர்.

பல கால மனப் போராட்டம்

பல கால மனப் போராட்டம்

பேட்டியின்போது ஜென்னர் கூறுகையில், பல காலமாக எனக்குள் எனது மனதுக்குள் நடந்து வந்த போராட்டம் யாருக்கும் தெரியாது. உள்ளுக்குள்ளாகவே நான் பல காலமாக, ஏன் சிறு வயதிலிருந்தே போராடி வந்தேன்.

நான் அவன் அல்ல அவள்

நான் அவன் அல்ல அவள்

என்னை அவன் என்று கூறிக் கொள்ள நான் விரும்பவில்லை. அவள் என்று என்னைக் குறிப்பிடுவதையே விரும்புகிறேன். ப்ரூஸ் என்று என்னைச் சொல்லிக் கொள்வதே பொய்யானதுதான். இந்தப் பொய்யை இத்தனை காலமாக நான் சொல்லி வந்தேன். இத்தனை காலமாக வாழ்ந்த வாழ்க்கையும் பொய்யானதே. இதை இனியும் தொடர நான் விரும்பவில்லை.

ஆண் அல்ல பெண்

ஆண் அல்ல பெண்

எனது மூளை ஒரு ஆணாக இல்லை. முழுக்க முழுக்க அது பெண்ணாகவே செயல்படுகிறது. இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம்தான். ஆனால் அதுதான் உண்மை.

சிறு வயதிலிருந்தே

சிறு வயதிலிருந்தே

சிறு வயதிலேயே அதாவது எனக்கு 8 அல்லது 9 வயதாக இருந்தபோதே எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்தேன். எனது தாயார் மற்றும் சகோதரிகளின் உடைகளை எடுத்துப் போட்டுப் பார்ப்பேன். அது எனக்குப் பிடித்திருந்தது. யாருக்கும் தெரியாமல் இதைச் செய்வேன்.

ரகசிய வாழ்க்கை

ரகசிய வாழ்க்கை

அவர்களது உடையை எடுத்துப் போட்டுப் பார்த்து விட்டு மீண்டும் மடிப்பு கலையாமல் அங்கேயே வைத்து விடுவேன். இந்த ரகசிய வாழ்க்கையை நான் நீண்ட காலம் வாழ்ந்து வந்தேன்.

வளர வளர

வளர வளர

நான் வளர்ந்து வாலிப வயதை எட்டியும் கூட இந்த ஆசை குறையவில்லை. மாறாக இப்போது அதிக சுதந்திரத்துடன் இதைச் செய்ய ஆரம்பித்தேன். எனக்காக நானே பல பெண் உடைகளை வாங்க வந்து போட்டுப் பார்ப்பேன். வெளியூர்களில், வெளிநாடுகளுக்குப் போகும்போது ஹோட்டல் அறையில் பெண் உடையில்தான் பெரும்பாலும் இருப்பேன்.

எனது மனைவிகளுக்குத் தெரியும்

நான் 3 முறை திருமணம் செய்தபோது எனது மனைவியருக்கு நான் யார் என்பதைச் சொல்லியுள்ளேன். அவர்களும் எனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு என்னைப் பற்றி வெளியில் சொல்லாமல் இருந்தனர். எனது சகோதரிகளுக்கும் கூட இது தெரியும். அவர்களும் எனது உணர்வை மதித்தார்கள்.

எனது பிள்ளைகளிடம் சொன்னபோது

எனது பிள்ளைகளிடம் சொன்னபோது

நான் ஆணாக இருந்த சமயத்தில் செய்த 3 திருமணங்கள் மூலம் எனக்குப் பிறந்த 10 பிள்ளைகள் மற்றும் எனது தாயாரிடம் சமீபத்தில் இந்த உண்மையைக் கூறியபோது அனைவரும் கதறி அழுதனர் என்றார் ஜென்னர்.

இவர் யார் என்று தெரிகிறதா....?

இவர் யார் என்று தெரிகிறதா....?

ஜென்னர் வேறு யாருமல்ல... கிம் கர்தஷியான் சகோதரிகளின் வளர்ப்புத் தந்தைதான் இந்த ஜென்னர். கர்ட்னி, கிம், கோல், ராப் கர்தஷியான் ஆகியோர் ஜென்னரின் வளர்ப்புப் பிள்ளைகள் ஆவர். இவர்கள் தவிர ஜென்னருக்கு பர்ட், காஸன்ட்ரா, பிரான்டன், பிராடி, கென்டல், கைலி ஆகிய 6 குழந்தைகள் உள்ளனர்.

அப்பா மீது பாசம்

அப்பா மீது பாசம்

அப்பா என்ற வகையில் என் மீது அதீத பாசம் வைத்துள்ளனர் எனது குழந்தைகள். அந்த உணர்வைப் புண்படுத்த அவர்கள் விரும்பவில்லை. அப்பாவை, அப்பாவாகவே பார்க்க விரும்புகிறார்கள் அவர்கள். அதனால் வந்த அழுகைதான் அது. எனக்கு மிகவும் ஆறுதலாக இருப்பவர்கள் எனது பிள்ளைகள்தான் என்றார் ஜென்னர்.

3 மனைவியர்

3 மனைவியர்

ஜென்னருக்கு மொத்தம் 3 மனைவியர். முதல் மனைவி பெயர் கிறிஸ்டி குரோனவர். இவரை 1972ல் மணந்து 81ல் பிரிந்தார் ஜென்னர். அடுத்த மனைவி லின்டா தாம்ப்சன். 81ல் மணன்து 86ல் பிரிந்தார். கடைசி மனைவி பெயர் கிறிஸ் ஜென்னர். 1991ல் மணந்தார். தற்போது அவரையும் பிரிந்து விட்டார் ஜென்னர்.

யார் யாருக்கு எத்தனை பிள்ளைகள்

யார் யாருக்கு எத்தனை பிள்ளைகள்

முதல் மனைவி மூலம் பிறந்தவர்கள்தான் பர்ட் எனப்படும் பர்ட்டன், காஸன்ட்ரா ஆகியோர். 2வது மனைவி மூலம் பிறந்த குழந்தைகள் பிரான்டன் மற்றும் பிராடி ஆகியோர். கடைசி மனைவிதான் கிறிஸ் கர்தஷியான். இவர் மூலம் பிறந்த குழந்தைகள் கென்டல் மற்றும் கைலி. கிம் கர்தஷியான் உள்ளிட்ட நான்கு பேரும் கிறிஸ் கர்தஷியாவின் முதல் கணவர் மூலம் பிறந்தவர்கள் ஆவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+