பிரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட் குண்டுவெடிப்பில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் 2 பேர் காயம்: விமானங்கள் ரத்து
டெல்லி: பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் விமான நிலையத்தில் இருந்த 13 பேர் பலியாகினர், 35 பேர் காயம் அடைந்தனர்.

முன்னதாக மும்பையில் இருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இன்று காலை 7.11 மணிக்கும், டெல்லியில் இருந்து கிளம்பிய விமானம் காலை 8 மணிக்கும் தரையிறங்கியது.
குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் பெண் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து வரும் 26ம் தேதி வரை பிரஸ்ஸல்ஸுக்கான விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

பிரஸ்ஸல்ஸில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து அறிந்தோம். ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள், பயணிகள் குறித்த விபரங்களை பெற அனைத்து முயற்சியும்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மார்ச் 22 - பிரஸ்ஸல்ஸ் - நியூவார்க், டொரண்டோ, மும்பை, டெல்லி
மார்ச் 22 - நியூவார்க் - டொரண்டோ - பிரஸ்ஸல்ஸ்
மார்ச் 23 - மும்பை மற்றும் டெல்லியில் இருந்து பிரஸ்ஸல்ஸ் செல்லும் விமானங்கள்
இது குறித்து மேலும் தகவல் அறிய இந்தியா - 1800225522, அமெரிக்கா - 1-877-8359538, இங்கிலாந்து - 08081011199 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications