மீத்தேன் வாயு கசிவு... கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம் - அச்சத்தில் மக்கள்
கலிபோர்னியா: பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் நச்சு வாயு கசிவு சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் கலிபோர்னியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘சோகால் கேஸ்' (Southern California Gas Company) எனப்படும் பிரபல தனியார் நிறுவனம் மீத்தேன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 8 ஆயிரம் அடிக்கும் மேல் ஆழமுள்ள கிணற்றில் இருந்து கேஸ் கசிவது, கடந்த ஆண்டு அக்டோபர் 23 ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மீத்தேன் கசிவு, கடந்த நவம்பர் மாத இறுதியில் உச்சக் கட்டத்தை எட்டியது. இதனால் பெருமளவில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கலிஃபோர்னியா காற்று வள வாரியம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் தற்போதும் மணிக்கு 30 ஆயிரம் முதல் 58 ஆயிரம் கிலோ வரை நிறை கொண்ட நச்சு மீத்தேன் வாயு காற்றில் கலந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாயு கசிவு ஏற்பட்ட இடத்திற்கு மிக அருகில் உள்ளது போர்டர் ராஞ்ச் பகுதி, அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போது தற்காலிகமாக வேறு பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குமட்டலும், மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படுவதாக அவர்கள் புகார் கூறியதை அடுத்து, கடந்த திங்கள் அன்று அப்பகுதி மக்களை கலிபோர்னியா மாநில கவர்னர் ஜெர்ரி பிரவுன் சந்தித்து ஆறுதல் கூறினார். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போர்டர் ராஞ்ச் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக கவர்னர் பிரவுன் புதனன்று அறிவித்தார். மேலும் அனைத்து அரசு அதிகாரிகள், இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சோகால்கேஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் லாய்ட் கூறும்போது, கசிவை அடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், துரிதமாகவும் பாதுகாப்பாகவும் கசிவை அடைத்து அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். கசிவை அடைக்கும் பணி நிறைவடைய மார்ச் மாதம் வரை ஆகும் என்று சோகால்கேஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீத்தேன் வாயு எடுப்பதானால் கலிபோர்னியாவைப் போல ஆபத்தான நிலை உருவாகும் என்று தெரிந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்க மத்திய அரசு அனுமதிப்பது ஏன் கேள்வி எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications