காமன்வெல்த் மாநாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம்- இங்கிலாந்து
லண்டன்: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டின்போது தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து பேசப் போவதாக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பது தவறு என்றும், மாறாக பிரச்சினைகளை அங்கு விவாதிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கும், காமன்வெல்த் அமைப்புக்கும் இடையே நெருங்கிய உறவும், தொடர்பும் உள்ளதால், தனது நாட்டால் இந்த மாநாட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறும் காமனவெல்த் மாநாட்டில், தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து இங்கிலாந்து பிரச்சினை எழுப்பும் என்றார்.
ஆனால் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறுகையில், நான் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டேன். இலங்கையில், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. பலர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு இலங்கை அரசிடம் பதில் இல்லை. சட்டவிரோத படுகொலைகளும் தலைவிரித்தாடுகின்றன. இந்த நிலையில் இலங்கை செல்வது சரியல்ல என்று எனக்குப் படுகிறது என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications