இந்தோனேசியாவில் அடுத்தடுத்த நிலநடுக்கம்.. இந்தியா பாதிக்குமா?
இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் லாம்போக் நகரத்தின் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
லாம்போக்: இந்தோனேசியாவில் நேற்று மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அனைவரும் லாம்போக் நகரத்தின் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இது இந்தியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு பத்து மணியளவில் இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் வந்த நிலநடுக்கத்தினால் மக்கள் பெரிதும் அச்சமடைந்து என்னசெய்வதென்று புரியாமல் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

உயிரிழப்புகள்
நிலநடுக்கத்தின் போது பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால், அதன் இடுக்கில் சிக்கி சில பேர் மோசமாக காயமடைந்தனர். அது மட்டும் அல்லாமல் பல பேர் தன் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இதுவரை காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
நேற்று இரவு எற்பட்ட நிலநடுக்கத்தினால் தற்போது லாம்போக் பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து லாம்போக் தீவு முழுவதும் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த தீவில் வசிக்கும் பொதுமக்கள் சில முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

430 பேர் உயிரிழந்தனர்
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் போல இந்த மாதம் தொடக்கத்தில் அதே லாம்போக் தீவில் மிக பெரிய நிலநடுக்கம் ஒன்று எற்பட்டது, அந்த நிலநடுக்கத்தின் போதும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, அது மட்டும் அல்லாமல், அந்த நிலநடுக்கத்தில் சுமார் 430 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நிலநடுக்கம்
அந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனால் இந்தியாவில் இது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications