முஷரப் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்: பாக். ஹைகோர்ட் திட்டவட்டம்
முஷரப் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும்: பாக். ஹைகோர்ட் திட்டவட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் முஷரப் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என விதிக்கப் பட்டுள்ள தடையை நீக்க மறுத்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரும் , ராணுவ தலைமை தளபதியுமான பர்வேஸ் முஷரப் மீது பெனாசிர் கொலை வழக்கு, தேசதுரோக வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. தற்போது அவர் பாகிஸ்தானில் உள்ள தனது பண்ணை வீட்டில் வீட்டுக் காவலில் இருக்கிறார். தேசதுரோக வழக்கு தவிற மற்ற நான்கு வழக்குகளிலும் முஷரப்புக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. தேசதுரோக குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் முஷரப், இன்று (24ம் தேதி ) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வழக்கு விசாரணையின் காரணமாக முஷரப்பிற்கு பாகிஸ்தானிலிருந்து வெளியேறக் கூடாது என்ற தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், துபாயில் வசித்து வரும் தனது 95 வயது தாயாரைப் பார்க்க தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி சிந்து ஹைகோர்ட்டில் முஷரப் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையின் போது, முஷரப் நாட்டை விட்டு வெளியேற விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது என்றும், இவ்விவகாரம் தொடர்பாக அரசை நாடும் படியும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications