Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! இந்த வாரத்தில் ராஜினாமா செய்ய திட்டம்?

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வரும் சூழலில் அவர் பதவி விலகுகிறார்.

கனடா நாட்டில் இந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருகிறது. சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்.

justin trudeau canada

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது படுகொலையில், இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்க, அதற்கு இந்தியா மறுத்து கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதனால், இந்தியா - கனடா உறவில் தூதரக ரீதியாக விரிசல் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், கனடாவை அமெரிக்காவில் இணைப்போம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். கனடாவிற்கு ஆண்டுக்கு 10 கோடி டாலர் மானியம் ஏன் வழங்குகிறோம் என்று யாராலும் பதிலளிக்க முடியாது? பல கனடா மக்கள், கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் வரி செலவு மற்றும் இராணுவப் பாதுகாப்பில் பெருமளவில் சேமிப்பார்கள். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார் டொனால்ட் டிரம்ப்.

இந்நிலையில், ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி ஆதரவைத் தொடர மறுத்துள்ளது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பதவியில் இருந்து கவிழ்க்க நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சியான என்.டி.பி தெரிவித்தது.

ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. இந்நிலையில், அக்கட்சியின் முடிவால் ட்ரூடோ பிரதமராக நீடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் தான் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தி குளோப் மற்றும் மெயில் ஊடகம், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ய இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ எப்போது ராஜினாமா பற்றி அறிவிப்பார் என்பது பற்றி தங்களுக்கு நிச்சயமாகத் தெரியாது, ஆனால் புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பு அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தகவல் பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் உடனடி பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ, பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியேறுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராக நீடிப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிடப்படுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்களிடம் ட்ரூடோவின் லிபரல் கட்சி மோசமாக தோல்வியடையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

2013 ஆம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பேற்றார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+