Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷேம் ஷேம் கோஷம்! கனடா மசூதியில் வெளியேற்றப்பட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன நடந்தது? பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: இந்தியாவுடன் மோதலை கடைப்பிடித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அங்குள்ள மசூதிக்குள் சென்றபோது முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ‛ஷேம்.. ஷேம்' எனக்கூறி வெளியே அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். அதாவது கனடாவில் சமீபத்தில் கேடிஎப் எனும் காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

Canada PM Justin Trudeau faced backlash during his visit to a mosque in Toronto

சீக்கியரான இவர் கனடாவில் குடியுரிமை பெற்று அங்கிருந்தபடியே இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டி வந்தார். இவர் மீது பல வழக்குகள் இந்தியாவில் நிலுவையில் உள்ள நிலையில் மர்மநபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தான் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கு பின்னணியில் இந்தியாவின் ஏஜென்சி இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதனை இந்தியா முற்றிலுமாக மறுத்ததோடு, ஆதாரங்களை வெளியிட கூறியது. ஆனால் ஜஸ்டின் ட்ரூடோ ஆதாரங்களை வெளியிடவில்லை. இந்த விவகாரத்தில் இருநாடுகள் இடையே மோதல் உச்சமடைந்தது. இதையடுத்து இந்தியாவில் இருந்து 41 கனடா தூதரக அதிகாரிகள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது நாட்டில் டொரண்டோவில் உள்ள மசூதிக்கு சென்றார். அப்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக முஸ்லிம்கள் கோஷமிட்டனர். குறிப்பாக ‛ஷேம்.. ஷேம்' என கூச்சலிட்டனர். மேலும் அவரை பேசவிடாமல் வெளியேற்றினர். இதில் அவரது முகம் வாடிப்போனது. மேலும் மசூதிக்கு வெளியே அவர் வந்போதும் பெண்கள் உள்பட சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே தான் தற்போது ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முஸ்லிம்கள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக ‛தி டொராண்டோ சன்' பத்திரிகையின் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்காமல் டொரண்டோவில் உள்ள மசூதிக்கு சென்றார். மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் சம்பவங்களால் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஜஸ்டின் ட்ரூடோ பேச வாய்ப்பளித்தபோது அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

அதாவது பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தி வருகிறது. அதுபற்றி ஜஸ்டின் ட்ரூடோ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. போர் நிறுத்தும்படி கூறவில்லை. மேலும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்வது பற்றியும் அவர் கூறவில்லை. இதுதொடர்பாக லிபரல் கட்சியின் எம்பியான சல்மா ஜாஹிட் 33 எம்பிக்களின் கையெழுத்துடன் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடிதம் எழுதியும் கூட அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. '' எனக்கூறி அவர்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,400க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் இஸ்ரேல் போரை அறிவித்து ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது 2 வாரத்தை கடந்து 3வது வாரத்துக்கு போர் சென்றுள்ளது. இந்த போரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் விரைவில் காசாவில் இஸ்ரேல் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+