பெரிய மனுஷன் பண்ற வேலையா.. கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த கையோடு ஜஸ்டின் ட்ரூடோ பன்றதை பாருங்க
டொராண்டோ: கனடா நாட்டின் பிரதமராக 2015 முதல் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இதேநேரம் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை பிரதமராக தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினார். அப்போது கையோடு நாற்காலியை தூக்கிச் சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது..
கனடா நாட்டின் பிரதமராக 2015 முதல் பதவி வகித்து வந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்த ஆண்டு இறுதியில் கனடா நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரையில் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமர் பதவியில் தொடருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த பல கட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, புதிய பிரதமராக லிபரல் கட்சியின் தலைவரும், இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி கடந்த 9-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் பதவியேற்க இருக்கிறார்.

இந்த நிலையில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ நேற்று முன்தினம் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த நிலையில் நேற்று லிபரல் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோவுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
அப்போது ஜஸ்டின் ட்ரூட்டோ உரையாற்றுகையில், கனடா அமெரிக்காவிடமிருந்து ஒரு சவாலை எதிர்கொண்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, சவால்கள், நெருக்கடிகள் எனத் தொடர்ந்து கனடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வநதது. ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும், கனடியர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றிருக்கிறோம். ஒவ்வொரு முறையும், நாம் இன்னும் வலுவாக நின்றிருக்கிறோம்-
இப்போது, நமது அண்டை நாட்டின் (அமெரிக்காவின்) சவாலை, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போதும், நாம் யார் என்பதை பெருமையுடன் அடையாளம் காட்டுகிறோம். நம் நாடு எப்போதும் ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாத்து வரும் நாடு ஆகும். முடிந்தவரை ராஜதந்திரமாக நாம் செயல்படுவோம். போராட்டம்தான் முடிவு என்றால் அதற்கும் தயாராக இருப்போம்..
நான் பிரதமராக இருந்த நாட்களில். நான் கனடியர்களை முதன்மையாகக் கருதினேன். எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அதன்மூலம் உறுதிசெய்திருக்கிறேன்.. இந்த அரசின் கடைசி நாட்களில் கூட, கனடியர்களை நான் ஏமாற்றவில்லை. அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பேன் என்பதை நிரூபித்துள்ளேன்" என்று உணர்ச்சிவயப்பட்டு அழுதபடி உரையாற்றியதுடன் விடை பெற்றார்.
பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவர் தனது நாற்காலியை எடுத்துச் சென்றுள்ளார். கையில் நாற்காலியை வைத்துக் கொண்டு நாக்கை வெளியே நீட்டியபடி புகைப்படத்துக்கு 'போஸ்' கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications