கனடாவில் இன்று நாடாளுமன்ற தேர்தல்... 44 இந்திய வம்சாவளியினர், 6 ஈழத் தமிழர்களும் போட்டி!
ஒட்டாவா: கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40% வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய கருத்து கணிப்புகளில் கன்சர்வேட்டிவ் அல்லது லிபரல் கட்சியே ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன. அதாவது 4வது முறையாக பிரதமராக விரும்பும் ஸ்டீபன் ஹார்பருக்கும் லிபரல் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமர் பியரே ட்ரூடியூவின் மகனுமாகிய ஜஸ்டின் ட்ரூடியூவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது.
அதே நேரத்தில் புதிய ஜனநாயகக் கட்சியும் கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலின் இறுதி கட்ட பிரசாரங்கள் ஞாயிறன்று ஓய்ந்தது.
44 இந்திய வம்சாவளியினர்...
இத்தேர்தலில் கணிசமான அளவில் வெளிநாட்டவரையும் கனேடிய அரசியல் கட்சிகள் களமிறக்கி உள்ளன. தற்போது மொத்தம் 44 இந்திய வம்சாவளியினர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 36 பேர் பஞ்சாபிகள்.
ஆளும் கன்சர்வேட்டிவ் 14, லிபரல்கள் 20, புதிய ஜனநாயக் கட்சி 10 இந்திய வம்சாவளியினரை களத்தில் நிறுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டு தேர்தலில் 10 பஞ்சாபியரும் 2011-ல் 8 பஞ்சாபியரும் வென்று எம்.பி.க்களாகினர். ஒட்டுமொத்தமாக கனடாவில் சுமார் 5 லட்சம் பஞ்சாபியர் வசிக்கின்றனர்.
6 ஈழத் தமிழர்கள் போட்டி
இதேபோல் கனடா தேர்தல் களத்தில் 6 ஈழத் தமிழர்கள் குதித்துள்ளனர். இவர்களில் ராதிகா சிற்சபை ஈசன் கடந்த தேர்தலில் வென்று முதல் தமிழ் எம்.பி.யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்.
சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞரான ஹரி ஆனந்தசங்கரி, இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி கற்ற சாந்திகுமார், செந்தி செல்லையா, இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்ந்து கனடாவில் குடியேறிய ரோஷன் நல்லரத்தினம், கார்த்திகா கோபிநாத் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக கட்சி வேறுபாடுகளைக் கடந்து 6 தமிழரையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications